வைரமுத்துவுக்கு விருது வழங்க நடிகை பார்வதி எதிர்ப்பு

கேரள மாநிலம் இந்தியாவின் பிற மாநிலங்களில்இருந்து வித்தியாசமானது கலை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் முடிவு என அனைத்திலும் தனித்தன்மையை இழக்காமல் பாதுகாக்க போராடும் போர்க்குணமிக்கவர்கள் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மலையாளிகள்

இந்த விஷயத்தில் போராடக்கூடியவர்களை அந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் எந்த வகையிலும் பழிவாங்கவோ, தொழில்முறையில் இடையூறு செய்வதோ கிடையாது அதனால்தான் கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி இது சம்பந்தமான

நிகழ்வுகள், முடிவுகளில் நியாயமான கலகக்குரல் எழுப்ப திரைப்பட துறையினர்தமிழகம் போன்று பதுங்குவதும் இல்லைபயப்படுவதும் இல்லை தமிழ் திரைப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு விருது அறிவித்ததற்காக தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார்

ஞானபீட விருது பெற்றவரும்பிரபலமலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி.குறுப் அவரின் பெயரில் 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது கவிஞர்வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மலையாளத்தை தாய் மொழியாக கொள்ளாத ஒரு படைப்பாளிக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தனக்கு விருது கிடைத்த செய்தியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தெரிவித்துவாழ்த்து பெற்றார் வைரமுத்து.இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருந்ததாவது
கோபாலபுரத்தில்
ஓ.என்.வி இலக்கிய விருதினைக்
கலைஞருக்குக் காணிக்கை செய்தேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்னை வாழ்த்தி மகிழ்வித்தார்.
அவரது குரலும் அன்பும்
இன்னும் அந்த இல்லத்தில்
கலைஞர் வாழ்வதாகவே
பிரமையூட்டின.
தந்தைபோல்
தமிழ் மதிக்கும் தனயனுக்கு
நன்றி சொல்லி மகிழ்ந்தேன் என்று தெரிவித்திருந்தார

விருது பெற்றது குறித்து வைரமுத்து கூறியிருப்பதாவது,
ஓ.என்.வி. இலக்கிய விருது பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்தில் இருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதைக் கருதுகிறேன். மலையாளத்தின் காற்றும், தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணில் இருந்து பெறும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்று தான். இந்த உயரிய விருதினை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார

வைரமுத்துவுக்கு விருது கிடைத்துள்ளது குறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்

இந்த விருது குறித்த செய்தி அறிந்த
பிரபல நடிகை பார்வதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஓ.என்.வி. சார் நம் பெருமைக்குரியவர். ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவம் அவர் ஆற்றிய பங்கை யாருடனும் ஒப்பிட முடியாது.
அவரின் படைப்புகள் மூலம் நாம் அடைந்த நன்மைகளுக்கு ஈடே இல்லை. அதனால் தான் அவர் பெயரில் இருக்கும் இப்படிப்பட்ட கௌரவமான விருதை பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு வழங்குவது அவமரியாதையாகும்
என தெரிவித்துள்ளார்.
பார்வதியின் ட்வீட்டுக்கு லைக்குகள் வந்து குவிந்து வருகிறது சசி இயக்கத்தில் வெளியான பூ படம் மூலம்சசி இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான பூ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நடிகைபார்வதி. மனதில் பட்டதை தைரியமாக பேசுவதற்கு பெயர் போனவர்.