தர்மபிரபு இன்று முதல் 300 திரைகளில்

0
156

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரம் முதல் அறிமுக நாயகன் நடிக்கும் படங்கள் வரை வெளியிட்டு நேரத்தில் ஏதேனும் பிரச்சினையை சந்திப்பது வாடிக்கையான ஒன்று.

இது போன்று எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளாமல் அறிவித்த தேதி யில் உலகம் முழுவதும் தர்ம பிரபு இன்று சுமார் 700 திரைகளில் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் மட்டும் 300 திரைகளில் திரையிடப் பட்டுள்ளது.

தமிழ் படங்களில் கிடைக்கிற வேடத்தில் நடித்து கொண்டிருந்த யோகி பாபு இன்றைக்கு தமிழ் சினிமா தவிர்க்க முடியாத குடும்பங்கள் கொண்டாடும் காமெடி நடிகராகி விட்டார்.

கதையின் நாயகனாக எமதர்மன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படம் தான் தர்ம பிரபு இப்படத்தில் ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ராதா ரவி, அழகம்பெருமாள், மனோபாலா, கடலோர கவிதை ரேகா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை முத்துகுமரன் இயக்கி உள்ளார்.ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரெங்கநாதன் தயாரித்திருக்கிறார்.

முன்ணனி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பில் வெளியாகும் படங்களே அவுட் ரேட் முறையில் வியாபாரம் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து கொண்டுள்ளனர்.

இந்த சூழலில் தான் எட்டு கோடி பட்ஜெட்டில் தயாரானதர்ம பிரபு படத்தைசுமார் 9 கோடி வரை அவுட்ரேட் முறையில் வியாபாரம் செய்து தமிழ் சினிமா வியாபாரிகளையும், தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ரெங்கநாதன் இவருக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலமான நடிகர்கள் நடித்த படங்களே தொலைக்காட்சி உரிமை வியாபாரம் ஆகாது தேங்கி இருக்கும் சூழலில் தர்மபிரபு படத்தின் டிஜிட்டல், தொலைக்காட்சி உரிமை காய1.60 கோடி ரூபாய்க்கு சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

வட இந்திய உரிமை 1. 20 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது கண்டு தமிழ் சினிமா வியாபாரிகள் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இது எப்படி சாத்தியமானது என தயாரிப்பாளர் ரெங்கநாதனிடம் கேட்டபோது தொழிலை நேசித்து, திட்டமிட்டு படத்தை தயாரித்ததால் இது சாத்தியமானது என்கிறார்.

காமெடி நடிகர் யோகி பாபுவுக்காக இந்த வியாபாரம் ஆனதா என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது அரசியல் விமர்சனங்கள் திரைக்கதையில் இருக்கும் பட்சத்தில் அப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும்

தர்ம பிரபு டிரைலரை பார்த்தாலே தெரிகிறது தமிழக அரசியலை நேர்மையோடு விமர்சனம் செய்திருக்கும் படமாக இருக்கும் இப்படம் இருக்கும் என்ற நம்பிக்கையின் விளைவே தர்ம பிரபு படம் எல்லா ஏரியாவும் அவுட் ரேட் முறையில் வியாபாரம் ஆக காரணம் என்கின்றனர்.

அத்துடன் இப்படத்திற்கு ரசிகர்களை குடும்பத்தினரை தியேட்டருக்கு ஈர்த்து வரும் நடிகராக யோகி பாபு இருக்கிறார் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here