கிரிக்கெட் வீரர்எம்.எஸ் தோனி வாழ்க்கை வரலாறுபடத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் கிரிக்கெட்ரசிகர்களை கவர்ந்தவர் சுஷாந்த் சிங்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட அவருடைய மரணம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவருடைய கடைசி ஹிந்திப் படம் ‘தில் பேச்சரா’. இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2014ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘The Fault in our Stars’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்தான் ‘தில் பேச்சரா’.

இப்படத்தை ஜுலை 24ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் நேரடியாக தனதுOTTதளத்தில் வெளியிடுகிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டார்-ஐப் பார்க்க சந்தாதாரர்களாக இல்லாமல் இருப்பவர்களும் இந்தியாவில் இப்படத்தை இலவசமாகப் பார்க்கலாம்.

ஸ்டார் டிவியில் ‘Kis Desh Mein Hai Meraa Dil‘ என்ற நிகழ்ச்சியின் மூலம் கலையுலகில் தன் பயணத்தைத் துவக்கியவர் சுஷாந்த் சிங். அவருடைய கடைசி படத்தை ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த ஹாட்ஸ்டார் வெளியிடுகிறது.

இதன்மூலம் இந்தியாவில்OTT தளத்தில் படம் பார்க்கும் பார்வையாளர் எண்ணிக்கையை ஹாட் ஸ்டார் அதிகரிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது இந்த அறிவிப்பு சந்தா கட்டி பிற OTT தளங்களில் படம் பார்த்து வந்தவர்களை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள புதிய சலுகைகளை அந்நிறுவனங்கள் அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஹாட் ஸ்டார் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here