மூன்றாம் தலைமுறை நடிகர்களுடன் இயக்குநர் குகநாதன் இணையும் படம்

0
35

மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆரூரான் தயாரிக்கும் படத்திற்கு தேன் நிலவில் மனைவியை காணோம் என்ற  தலைப்பை வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு உட்பட ஏனைய மொழிகளில் 250 படங்களில் தனது பங்களிப்பை கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராக பணியாற்றியவர்

வி.சி.குகநாதன், எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமாராவ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், என மூன்று தலைமுறைகளுடன் பணியாற்றியவர்
 இன்றைய நவீன சினிமா இளைஞர்களுடன்V.C.குகநாதன்
கைகோர்க்கும் படம் தான் தேன்நிலவில் மனைவியை காணோம்
இந்தப் படத்தின் கதையை இன்றைய இளைய சமுதாயம் விரும்பும் வகையில் எழுதிஉள்ளார்.
இதனை அறிந்த நகைச்சுவை நடிகரான யோகிபாபு நேரடியாக சென்று V.C.குகநாதனை சந்தித்து கதையை கேட்டதுடன், அதில் உள்ள மிக வித்தியாசமான கேரக்டரில் நானே நடிக்கிறேன் என உத்திரவாதம் கொடுத்துள்ளார் யோகி பாபு
இந்தப் படத்தில் முன்னணி மலையாள நடிகை ஒருவர் கதையின் நாயகியாகநடிக்கவுள்ளார்இவர்களுடன் புதுமுகம் அமன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, நான் கடவுள் ராஜேந்திரன், சிவசங்கர் ஆகியோருடன், பிரியங்கா, ரிஷா மற்றும் பலர் நடிக்கின்றனர். புகழ்மணி வசனத்தையும், சினேகன் மற்றும் ஹிருதயா இருவரும் பாடல்களையும் எழுத தேவா இசையமைக்கிறார். கணேசன் ஒளிப்பதிவையும், சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும், பி.என்.சுவாமிநாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சினிமா பயிற்சி பெற்ற கயல் கதிர்காமர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here