நாய் சேகர் ரிட்டன்ஸ்

0
45
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்க்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள திரைப்படத்திற்கு
“நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று  தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்
இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர் ‘நாய் சேகர்’. இந்தப் பெயரில் புதிய படத்தை எடுக்க சுராஜ் திட்டமிட்டமிட்டிருந்தார்.
ஆனால் காமெடி நடிகர் சதீஷை நாயகனாக வைத்து இதே ‘நாய் சேகர்’ என்ற தலைப்பில் புதிய இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருவதால் அந்தத் தலைப்பு வடிவேலு படத்திற்குக் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வைஆகியவற்றை லைக்கா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம்
அதிகாரப்பூர்வமாகவெளியிட்டுள்ளது
நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here