பிரபல தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றைக் கூறும் The Anarchy: The Relentless Rise of the East India Company என்ற புத்தகத்தின் உரிமைகளை பெற்று அதனை வெப் சீரிஸாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வில்லியம் டால்ரிம்பிள்(William Dalrymple) எழுதிய தி அனார்கி: தி ரிலென்ட்லெஸ் ரைஸ் ஆஃப் தி ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற புத்தகம் இந்திய துணைக்கண்டத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியையும் கிழக்கிந்திய கம்பெனியின் எழுச்சியையும் காட்டுகிறது. லண்டனில் உள்ள ஒரு சிறிய அலுவலகத்திலிருந்து 30 பேர் நடத்தும் ஒரு வர்த்தக நிறுவனமாக இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி எப்படி ஒரு முழு துணைக் கண்டத்தின் ஆட்சியாளர்களாக வளர்ந்தது என்பதன் வரலாறு இதில் உள்ளது.

சித்தார்த் ராய் கபூர் சர்வதேச எழுத்தாளர்கள், ஷோ ரன்னர்களைக் கொண்ட ஒரு குழுவை ஒன்றிணைத்து, அளவிலும் தரத்திலும் புதிய பாதையை ஏற்படுத்தும் ஒரு வலைத் தொடரை இந்த நாவலை தழுவி உருவாக்க விரும்புகிறார். இது குறித்து கூறும் சித்தார்த், ” மாபெரும் நிறுவனங்கள், சக்தி வாய்ந்த தனி நபர்கள், நமது மனம் மற்றும் நாடுகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது பற்றி இன்று உலகம் முழுவதும் ஒரு விவாதம் எழுந்தாலும், ஒரு முழு துணைக் கண்டத்தையும் ஒரு சிறிய வர்த்தகத்தின் மூலம் கையகப்படுத்தியதன் உண்மையான கதையை விட உலகளாவிய பார்வையாளர்களுக்கு என்ன பொருத்தமானது?”என்று சித்தார்த் பகிர்ந்து கொண்டார்.

இந்த வலைத்தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் எழுத்தாளர் டால்ரிம்பிள் கூறும் போது, “சித்தார்த் ராய் கபூரை விட இதனை எடுக்க சிறந்த நபர் வேறு யாரும் இல்லை. லஞ்ச்பாக்ஸ், ஹைதர் போன்ற இந்திய சினிமாவின் மிகப் பெரிய படைப்புகளை அவர் தயாரித்துள்ளார். அதே சமயம், ஜோதா அக்பர் போன்ற காவியங்களையும் அவரால் செய்ய முடியும். எனக்கு அதிக நம்பிக்கை கிடைத்துள்ளது. இது மிகப் பெரிய பட்ஜெட் தொடராக இருக்க வேண்டும் என்று சித்தார்த் விரும்புகிறார். இது இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்களுடன் இணைந்த சர்வதேச எழுத்தாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here