விலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்

0
64

கமல்ஹாசன் உடன் இணைந்து வேட்டையாடு விளையாடு 2 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போவதாக அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், லாக் டவுன் முடிந்த பிறகு, மீண்டும் கமல்ஹாசன் உடன் கைகோர்க்க கெளதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது.
வேட்டையாடு விளையாடு 2 படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக நடிகை அனுஷ்காவை நடிக்க வைக்கவும் பேச்சுக்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா நடிப்பில் என்னை அறிந்தால் படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க

அனுஷ்கா ரெடியாம்.
கடந்த மாதம் இன்னும் ஒரு பத்து நாட்களில் நடிகர் சூர்யாவுக்கு ஒரு மியூசிக்கல் லவ் சப்ஜெக்ட் சொல்லப் போவதாக கெளதம் மேனன் அறிவித்திருந்தார். ஆனால், சூரரைப் போற்று ரிலீஸ், அருவா ஷூட்டிங், வெற்றிமாறன் உடன் வாடிவாசல் என சூர்யா பிசியாக இருப்பதால், கெளதம் மேனன் – சூர்யா காம்போ மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
கமல் – கெளதம் கூட்டணியில் உருவாகும் படத்தை வேல்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here