வசூலுக்கு – “எமன்”

வசூலுக்கு -எமன்
லைக்கா-விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்து பிப்ரவரி 24 வெளியாகி, இருக்கும் படம் எமன். விஐய் ஆண்டனி – மியாஜார்ஜ், சங்கிலி முருகன், தியாகராஜன், சார்லி நடித்துள்ளனர். வியாபார ரீதியாகவும், வசூல் அடிப்படையிலும் முன்னேறி வந்த இடைநிலை நாயகன்” விஜய் ஆண்டனி தனது வழக்கமான பார்முலாவில் இருந்து மாறி பயணித்திருக்கும் படம். அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்காக விசுவாசம், நாணயத்தை பலி கொடுக்க
தயங்க மாட்டார்கள்என்பதை சொல்லும் ஒரு வரி கதை எமன். ஒரே கதையை பார்க்கும் விதத்தில், ரசிக்கும் வகையில் எத்தனை படங்களாக எடுத்தாலும் ரசிகன் பார்ப்பான். அந்தக் கணக்கு ஹீரோவும் பொருந்த வேண்டும். இந்த இரண்டுமே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம் எமன் என்கிறார் தியேட்டரில் படம் பார்த்த ரசிகன். படத்தில் எந்த காட்சியாக இருந்தாலும் விஜய் ஆண்டனி முழுத்திரையையும் ஆக்கிரமித்தால் எப்படிங்க படம் பார்க்க முடியும் என்கிறார் நகர்புறத்தில் எமன் படம் பார்த்த ஐ.டி.ஊழியர். தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக துவைத்து தொங்கப் போட்ட அரசியல் படங்களில் பல்வேறுகாட்சிகளை உருவி ஒருங் கிணைக்கப்பட்ட படம் எமன் என்கிறார் தியேட்டர் ஆப்ரேட்டர். தமிழகத்தில் தியேட்டர்களில் ஒபனிங் இல்லை, வசூலும் இல்லை என்பது தான் எமன் படத்தின் நேற்றைய நிலைமை. இந்த நிலை மாறும் என்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறது விநியோக வட்டாரம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு: ஜீவா சங்கர்.

pizap.com14880128746771

Share:Share on FacebookTweet about this on TwitterPin on Pinterest