தமிழ் படத்தில் அமிதாப்பச்சன்

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் தமிழில் முதன்முறையாக நடிக்கவுள்ளார்.

அமிதாப் பச்சனை தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களோடு நடிக்கவைத்து தமிழுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் பலமுறை நடைபெற்றன.

அப்போது அந்த வாய்ப்புகளை நிராகரித்த அமிதாப் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா நடித்த கள்வனின் காதலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தமிழ்வாணன். இவர் இயக்கும் புதிய படம் ‘உயர்ந்த மனிதன்’

தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராக உள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவுள்ளனர்
இந்தப் படத்தின் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதோடு இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் அமிதாப் பச்சனுக்கும், இந்தியில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஜினியைச் சந்தித்தபோது எடுத்த வீடியோவையும் படம் பற்றிய அறிவிப்பையும் எஸ்.ஜே.சூர்யா  ஆகஸ்ட் 30 அன்று வெளியிட்டுள்ளார்.

சுரேஷ் கண்ணன் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.