போகன் – நான்கு நாட்களில் 12 கோடி

பிரபுதேவா ஸ்டுடியோஸ் – ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்த “போகன்” திரைப்படம் ஜனவரி 2 ரீலீஸ் செய்யப்பட்டது. ஜெயம் ரவி – அரவிந்தசாமி தனி ஒருவன் படத்திற்கு பின் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. பிரம்மாண்டமான தொடர் விளம்பரங்களுடன் வெளியான போகன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில். இருப்பினும் கடந்த நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் சுமார் 12 கோடி மொத்த வசூலாகியுள்ளது. தனி ஒருவன் படத்தின் வசூலை விடவும் இதுகுறைவு.