அர்ச்சுன் மீது பெங்களூரில் வழக்குப்பதிவு

பெங்களூரு: நடிகை ஸ்ருதி ஹரிகரன் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக  நிபுணன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது அந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார்.
இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன்  தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் METOO மூலம் பாலியல் புகார் தெரிவித்தார். இதனால் திரையுலகில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை.

ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ  இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்
மேலும் நடிகர் அர்ஜுன் தரப்பில் அவரது மேலாளர் சிவராஜ் கடந்த 25-ம் தேதி காலை பெங்களூரு கமிஷனர் சுனில் குமாரை சந்தித்து அர்ஜூனின் இமெயில் ஐ.டி,  முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்கு ஆகியவை 6 மாதத்திற்கு முன்பே  முடக்கப்பட்டிருக்கிறது.
மர்ம நபர்கள் அர்ஜுன் பெயரில் போலி கணக்கு தொடங்கி, குறும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கும் ஸ்ருதி   ஹரிஹரனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று புகார் அளித்தார்.

புகாரை ஏற்ற நகர போலீஸ் கமிஷனர் சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஸ்ருதி ஹரிஹரன் மீது எப்.ஐ.ஆர் தாக்கல் செய்தனர்.

இது தவிர நடிகர்   அர்ஜுன் தரப்பில் அவரது வக்கீல் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் நடிகர் அர்ஜுன் பெயருக்கு களங்கம் விளைவித்த நடிகை ஸ்ருதி ஹரிகரன் ரூ.5 கோடி  வழங்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது பெங்களூரு போலீசார் 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.