செக்கச்சிவந்த வானம்

செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிக்கும் சிம்புவின் கதாபாத்திரப் பெயர் மற்றும் போஸ்டரை அப்படக்குழு ஆகஸ்ட் 16 அன்று வெளியிட்டுள்ளது.

‘காற்று வெளியிடை’ படம் சரியாக போகாத நிலையில் உடனே தனது அடுத்த படமாக செக்கச்சிவந்த வானம் படத்தின் பணிகளில் இறங்கினார் இயக்குநர் மணிரத்னம்.

அருண் விஜய்,அரவிந்த்சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,ஜோதிகா, அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் மேற்கொள்கின்றனர்.

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் வரதனாக அரவிந்த்சாமியும், ரசூலாக விஜய்சேதுபதியும், தியாகுவாக அருண் விஜய்யும் நடிக்கிற கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் ஏற்கெனவே படக்குழுவால் வெளியிடப்பட்டிருந்தன.

சிம்புவின் கதாபாத்திரம் மட்டும் வெளியிடப்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் அந்த போஸ்டர் ஆகஸ்ட் 16 . அன்றுவெளியானது

கூலர்ஸ் அணிந்தபடி சிம்பு தோன்றியுள்ள இந்தக் கதாபாத்திரத்திற்கு ‘எத்தி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.