அதிக செலவில் தயாரிக்கப்பட்ட முதல் இந்தியப் படம் 2.0

 

சுமார் 600 கோடி செலவில் தயாராகியிருக்கும் முதல் இந்தியப்படம் 2.0

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு நிகழ்ச்சி இன்று காலைசென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார்,ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஷங்கர், ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆரம்பமாக கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘புல்லினங்காள்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது.

பிறகு, ‘இந்திரலோகத்து சுந்தரியே’ பாடல் முதன் முறையாக ஒளிபரப்பப்பட்டது.

அதன்பின், ‘2.0’ படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது.

ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் உருவான விதம் பற்றி பேசினார். ட்விட்டரில் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

‘உங்களுக்கு பிடிச்ச ஹீரோ யார்?’ என்று அனிருத் கேள்வி கேட்க, அதற்கு ‘சூப்பர் ஸ்டார்தான்’ என பதில் அளித்தார் ரஹ்மான்

‘காரணம் என்ன’?, ‘இந்த வயதிலும் அவரோட எஃபோர்ட்தான் காரணம். ஆஸ்கர் வாங்கியாச்சு. நான் நாற்பது வயசில ரிடையர்ட் ஆகிடலாம்னு நினைச்சேன். ஆனா ரஜினி சாரை பார்த்தேன். அவர் இன்னும் அதே சுறுசுறுப்புடன் இருக்கார்னு என் முடிவை மாத்திக்கிட்டேன்” என்றார்.

அடுத்து பேசிய முத்துராஜ், “என் சினிமா கேரியர்ல பெரிய பயணம். நல்ல அனுபவமா இருந்தது. குறிப்பா, 3Dக்காக வொர்க் பண்ணும்போது புதுசா இருந்தது. ரஜினி சார் ரசிகனா இருந்து அவர் படம் பண்ணும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளை பாலாஜி கேட்க, அதற்கு முத்துராஜ் பதிலளித்துள்ளார்.

வணக்கம் சென்னை, மகிழ்ச்சி” என ஆரம்பித்த அக்‌ஷய் குமார், தமிழக மக்களுக்கு தமிழில் நன்றி சொன்னார். அக்‌ஷய் குமாரிடம் விஷால், ” உங்களின் ஃபிட்னெஸ் பத்தி படிச்சு வியந்திருக்கேன். உங்க ஃபிட்னெஸை எப்படி மெயின்டெயின் பண்றீங்க?” என்று கேட்ட கேள்விக்கு, ” நான் ஜிம் வெச்சிருக்கேன்.

4 மணிக்கு எழுவேன். என் அப்பா ஆர்மியில இருந்ததுனால அது எனக்கு பழக்கமாகிடுச்சு. நான் சூர்ய உதயத்தை பார்க்காம ஒரு நாள் கூட இருந்தது இல்லை. எனக்கு இது பிடிச்சிருக்கு.
நான் என் உடலை கோவில்னு நினைக்கிறேன். அதுதான் காரணம். விஷால் உங்க ஃபிட்னெஸ் பத்தி படிச்சிருக்கேன். உங்க அம்மாவோட சந்தோஷத்துக்காகவாவது வாரத்துல ஒரு நாளாவது டயட் இல்லாமல் நல்லா சாப்பிடுங்க” என்றார்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் ரஜினிகாந்திற்கும் படக்குழுவுக்கும் தன் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

ஶ்ரீனிவாஸ் மோகன், “மூன்றரை வருஷமா வொர்க் பண்ணிட்டு இருக்கோம். சங்கர் சார் ரொம்ப சப்போர்ட் பண்ணார். உலகம் முழுக்க 25 டீம் வொர்க் பண்ணியிருக்காங்க. தலைவர்க்கூட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம்” என்றார்.

ஸ்டன்ட் சில்வா, “இந்தப் படத்துல என் பங்கும் இருக்கிறது சந்தோஷம். நிறைய ஹாலிவுட் டெக்னிஷீயன்களுடன் வொர்க் பண்ணி நிறைய கத்துக்கிட்டேன். ரஜினி சாருக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல அடிப்பட்டு ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு.

அவர் அதை கண்டுக்காமல் அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகிட்டு இருந்தார். அப்புறம் ஷங்கர் சார் சொல்லி ஹாஸ்பிட்டல் போய் பார்த்தா, பெரிய அடி, நாலு தையல் போட்டாங்க. அந்தளவுக்கு டெடிகேஷனா வொர்க் பண்ணார் ரஜினி சார். அக்‌ஷய் சாரை ‘அயர்ன் மேன்’னுதான் சொல்லணும்” என்றார்.

எமி ஜாக்சன், “ரெண்டு பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும்போது ரொம்ப பதட்டமா இருந்தேன். அவங்க எனக்கு நல்லா சப்போர்ட் பண்ணாங்க.

ஷங்கர் சார்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். சிட்டிக்கூட நடிக்கிறதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீரவ் ஷாக்கூட மூன்று படம் பண்ணிட்டேன்.
செட் சூப்பரா வடிவமைச்சிருந்தார் முத்துராஜ். எனக்கு வாய்ப்பு ஜொடுத்த ஷங்கர் சாருக்குத்தான் என் நன்றி சொல்லணும்” என்றார்.

நான் ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இந்தியாவின் பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும்போது எந்த ப்ரஷரையும் ரஜினி சார் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பையும் எப்படி சமாளிச்சிங்க?” என்று ராஜமெளலி கேட்க, அதற்கு, ” நல்லா வேலை செஞ்சுதான் பிரஷரை சமாளிக்கிறேன்” என்று பதிலளித்தார் ஷங்கர்.

“எப்படி இப்படி ஒரு சிந்தனை வருது? நான் உங்க படத்துல நடிக்கணும் சார்” என சிவ்ராஜ்குமார் கேட்க, “இது எங்கே இருந்து வருதுனு தெரியலை. கதை எழுதும்போதே டைட்டில் சரியா அமைஞ்சிடும். ‘எந்திரன் பார்ட் 2’ சொல்றதை விட ‘2.0’ னு பேர் வெச்சேன். வாய்ப்பு வரும்போது கண்டிப்பா வொர்க் பண்ணுவோம் சார்” என்றார் ஷங்கர்.

3.0 வருமா ?’ என்று மக்கள் கேட்ட கேள்விக்கு,” சின்ன சின்ன ஐடியா இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தா ‘3.0’ பண்ணிடுவோம். என்றார்.

‘ஒரு டைரக்டரா ஷங்கர் சாரும் ஒரு ஹீரோவா ரஜினி சாரும் எனக்கு டிப்ஸ் கொடுங்களேன்’ என உபேந்திரா கேட்க, ” உங்களுக்கு செளகரியமா படங்கள் பண்ணாதீங்க. சரியான கதைகளை தேர்ந்தெடுத்து அதுக்கு உங்களை முழுமையா கொடுங்க” என்றார் ஷங்கர்.

“இப்படி நடந்தா எப்படி இருக்கும் அதான் கதை. சவுண்டோட புதுமைய உணர முடியும். சுபாஸ்கரன் இல்லைன்னா இந்தப் படம் இல்லை.

இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம் ரஜினி சார். அவர் என்ன பண்ணாலும் ஸ்டைலா இருக்கு; மாஸா இருக்கு. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாங்க. ஆனாலும், மத்தவங்க எல்லோரும் வந்திருக்காங்க,
பணம் வீணாகிடும்னு சொல்லி, டெல்லி வந்து நடிச்சுக்கொடுத்தார். கால் முட்டியில் ரெண்டு இன்ச் கிழிஞ்சிருந்தது. நாங்க கெஞ்சி அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிப்போனோம்.
அந்தளவுக்கு டெடிகேஷன். அக்‌ஷய் குமார் இந்த மாதிரி வேற எந்தப் படத்துக்கும் மேக் அப் போட்டிருக்க மட்டார். ரஹ்மானோட பிஜிஎம் வேற லெவல்ல இருக்கும்
இப்படத்துக்காக என் கூட தூங்காமல் நாயா உழைச்சது என் அசோஸியேட் பப்புதான். என் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு நன்றி. முத்துராஜ் கலக்கிட்டார்” என்றார்.

ரசிகர்களின் ஆரவாரத்துடன் தனக்கான ஸ்டைலில் பேச்சை தொடங்கினார் ரஜினிகாந்த்.சுபாஷ்கரன் ஷங்கர் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கார். அது எப்போவும் வீணாகாது. த்ரில்லர், என்டர்டெயினரா மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலான மெசேஜையும் ஷங்கர் சொல்லியிருக்கார்.

 ஷங்கராலாதான் இப்படி பண்ண முடியும். அவர் என்கிட்ட கதை சொன்னவுடனே யார் தயாரிக்கிறாங்கன்னுதான் கேட்டேன். ‘சிவாஜி’ படத்துல நினைச்ச்சதை விட அதிகமா செலவாகிடுச்சு.
ஆனா, கலெக்‌ஷன் சூப்பரா இருந்தது. ஆரம்பித்தது 300 கோடி இப்போ நெருக்கி 600 கோடி வந்திருக்கு. கண்டிப்பா அதைவிட அதிகமா கலெக்ட் பண்ணும்
உடம்பு சரியில்லாம இருந்ததுனால என் மேல நம்பிக்கை போயிடுச்சு. என்னால முடியலை. என்னை விட்டுடுங்கன்னு சொன்னேன். ஆனா, ஷங்கர்தான் என்னை ஊக்கப்படுத்தினார்.
நாலு மாசம் ரெஸ்ட் வேணும்னு சொன்னாங்க. ‘நாலு வருஷம் எடுத்துக்கோங்க. எனக்கு பணம் முக்கியம் இல்லை. உங்க ஆரோக்கியம் தான் முக்கியம்’னு சொன்னார்.
கோஹினூர் வைரம் மாதிரி சுபாஷ்கரன். படம் லேட் ஆகும் போது, ‘ஏன் வரலை, வருமா வராதா’னு கேட்டாங்க. அது முக்கியம் இல்லை.
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும். நான் படத்தை சொன்னேன்.
இன்னும் ரிலீஸ் மட்டும்தான் பாக்கி. அக்‌ஷய் குமாரை அந்த கெட்டப்ல பார்த்து அசந்துட்டேன். ரஹ்மான், ஆஸ்கருக்கு ஒரு சேலஞ்ச். டெக்னீஷீயன்ஸ் மற்றஉம் அஸிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாருக்கும் நன்றி” என்றார் ரஜினி.