முதலுக்கு மோசம் செய்த விவேகம்

வெளிநாடுகளில் விவேகம் விண்ணை முட்டிய வெற்றி ரஜினி, விஜய் படங்களின் வசூலை முறியடித்தது முதல் இடத்திற்கு முன்னேற்றம்என தகவல்கள் தடாலடியாக பரப்பப்பட்டது. அப்படி எந்த ஒரு சாதனையும் விவேகம் வசூல் நிகழ்த்தவில்லை.க பாலியும்பைரவா ஆகிய படங்கள் வாங்கிய வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. விவேகம் படம் அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. 1 .60 கோடிக்கு இலங்கை உரிமை வாங்கிய விவேகம் பட விநியோகஸ்தருக்கு இதுவரை 1 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியிருக்கிறது. மேலும்60 லட்சம் வசூலானால் அசல் தேறும் .அதற்கான அறிகுறிகளே கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. கபாலி, பைரவா போன்ற படங்கள் மிகப் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் செய்யவில்லை என்கிறது இலங்கை விநியோக வட்டாரம்.