ஜுலை 1, வெளியான படங்கள் – வசூல் நிலவரம்

நேற்றைய தினம் (1.07.2016) தமிழகத்தில் ரிலீஸ் ஆன படங்களில் வசூல் அடிப்படையில் சத்யராஜ், சிபிராஜ் நடித்துள்ள ‘ஜாக்சன் துரை’ முதலிடத்திலும், ஹாலிவுட் படமான ‘டார்ஜான்’ இரண்டாம் இடத்திலும், சமுத்திரக்கனி இயக்கி தயாரித்து நடித்துள்ள ‘அப்பா’ மூன்றாம் இடத்திலும் உள்ளது.

‘தமிழன்’ பட இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கியுள்ள ‘பைசா’, அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா நடித்துள்ள ‘ஒரு மெல்லிய கோடு’, ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ ஆகிய மூன்று படங்களும் வகுல் ரீதியாக தடுமாற்றத்தில் உள்ளன.

வந்த படங்களில் ‘அப்பா’ படம் நன்றாக இருக்கிறது என்பது படம் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது. இப்படம் வரும் நாட்களில் வகுல் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

‘ஜாக்சன் துரை , டார்ஜான்’ படங்கள் வசூல் குறைவதற்கு வாய்ப்பில்லை. ‘பைசா, ஒரு மெல்லிய கோடு’ படங்களுக்கு வசூல் கூடுவது சிரமம்.

‘அப்பா’ படம் இப்படங்களின் வசூலைக் கடந்து முன்னேறி முதலிடம் பிடிக்கும் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

நேற்றைய ஒரு நாள் வசூல்

1. ஜாக்சன்துரை – 60 லட்சம்

2. டார்ஜான் – 50லட்சம்

3. அப்பா – 45 லட்சம்

பிற படங்கள் 10 லட்சத்தைக் கூட நெருங்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.