கபாலி – தமிழ்நாடு முதல் வார வசூல்

கபாலி 22.7. 16 அன்று ரீலீஸ் ஆனதிலிருந்து உலகம் முழுமையும் 100 கோடி ஒரே நாளில் வசூல் என செய்தி. தயாரிப்பாளர் தரப்பில் உலகம் முழுமையும் 4600 திரைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீலீஸ் என அறிவித்தனர்.

ஆனந்த விகடன், குமுதம் குழும பத்திரிகைகள் மலாய், சைனீஸ், ஜப்பான் மொழிகளில் 10000ம் தியேட்டர்களில் கபாலி ரீலீஸ் ஆனது என செய்தி வெளியிட்டு காமெடி செய்தனர்.

தமிழகத்தில் கபாலி படத்தின் உண்மை வசூல் நிலவரம் என்ன என்பதை ஊடகங்கள் சொல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு சாத்தியமில்லாத ஒரு தொகையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அமர்க்களமாக அரங்கு நிறைந்த காட்சியாக தொடங்கிய கபாலி பெருநகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் இரண்டாவது காட்சியில் நொண்டியடித்ததை ஊடகங்கள் கவனிக்கத் தவறியது.

உலகத் தமிழர்களும், மீடியாக்களும் எதிர்பார்த்த கபாலி படத்தை அதிக விலைக்கு டிக்கட் விற்க முடியது எனக் கூறி திரையிட மறுத்தனர் நெல்லை, திருச்சி ஏரியாவில் உள்ள பல தியேட்டர் உரிமையாளர்கள்.

இன்று வரை கபாலி அங்கு திரையிடவில்லை (சங்கரன்கோவில், பெரம்பலூர், மதுரை திருமங்கலம்) முதல் மூன்று நாட்களும் சராசரி வசூல் ஆன கபாலி, நான்காம் நாளிலிருந்து தியேட்டர்களில் 100க்கும் குறைவான டிக்கட்
விற்பனை என்ற சூழலுக்கு உள்ளானது.

தயாரிப்பாளர் தாணு சென்னை நகரில் 7 நாட்களில் 7 கோடி வசூல் என அறிவித்ததன் அடிப்படையில் பார்த்தாலும் விநியோகஸ்தர்கள் படத்துக்கு கொடுத்த விலையில் அசலில் 50% நஷ்டம் ஏற்படும் என்பதே உண்மை நிலவரம்.

‘கபாலி’ வசூல் முதல் வார நிலவரம்…

(1)சென்னை நகரம் – மொத்த வசூல் 7 கோடி – விலை 6.50 கோடி
(2) செங்கல்பட்டு – மொத்த வசூல் 7 கோடி – விலை 14 கோடி
(3) கோவை – மொத்த வசூல் 6 கோடி – விலை 12 கோடி
(4) மதுரை – மொத்த வசூல் 5.25 கோடி – விலை 9 கோடி
(5) சேலம் – மொத்த வசூல் – 3.75 கோடி – விலை 6.40 கோடி
(6) திருச்சி – மொத்த வசூல் – 4.80 கோடி – விலை 7.25 கோடி
(7) தென்னார்க்காடு – மொத்த வசூல் – 2 கோடி – விலை 5.50 கோடி
(8) வேலூர் – 5 கோடி – மொத்த வசூல் – 1.78 கோடி
(9) திருநெல்வேலி – மொத்த வசூல் 1.80 கோடி -விலை 5 கோடி