கலகலப்பு – சவரக்கத்தி- சொல்லி விடவா முதல் மூன்று நாட்கள் வசூல்

தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவதில் தங்களுக்கென்று தனிப்பாணியை அமைத்துக் கொண்ட இயக்குனர்கள் மிஷ்கின், ராம் இருவரும் இணைந்து நடித்து வெள்ளிக்கிழமை வெளியான முதல் படம் சவரகத்தி. படைப்பு ரீதியாக விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இருப்பினும் சாதாரண மக்களை மட்டுமல்ல ந கர்புற மக்களையும் சவரக்கத்தி கவரவில்லை. தமிழகத்தில் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமின்றி நகர்புற தியேட்டர்களில் படம் பார்க்க பார்வையாளர்கள் வருகை வாரத்தின் இறுதிவிடுமுறை நாட் கனிலும் குறைவாகவே இருந்தது.முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில்மொத்தம் 1கோடியே 14 லட்சம் வசூல் ஆனது.

கல கலப்பு – 2.

காமெடி படமெடுப்பதில் கரை கண்ட இயக்குனர் சுந்தர் சி. குஷ்பூ தயாரிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ளகலகலப்பு – 2 படத்தில்சினிமாவில் வியாபாரத் தன்மை இல்லாத ஜீவா, ஜெய், சிவா இவர்கள்தான் படத்தின் ஹீரோக்கள்.

குஷ்பூ – சுந்தர்.சி கூட்டணியில் தயாரான படம் என்பதால் வியாபார முக்கியத்துவம் மிக்க படமாகஆனது.தியேட்டர்களில் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம், ஒபனிங் இல்லை. ஒரு காட்சிக்கு 100 டிக்கட் விற்பனையைக் கடப்பதற்கு முதல் நாள்சிரமப்பட்ட இப்படம் சனி, ஞாயிற்று கிழமைகளில் வசூல் அதிகரித்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் தமிழ்நாடு மொத்த வசூல் சுமார் 6 கோடி

சொல்லிவிட வா

நடிகர் அர்ச்சுன் தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக்க தயாரித்த படம் சொல் லிவிடவா. கதை திரைக்கதை வசனம் எழுதி அர்ச்சுன் இயக்கி உள்ளார். பிரகாஷ்ராஜ், சுஹாசினி, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், கெளரவ வேடத்தில் அர்ச்சுன் என மக்கள் அறிந்த நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படத்திற்கு ஓபனிங் இல்லை. முதல் நாள் பல ஊர்களில் பார்வையாளர்கள் வருகையின் மையால் காட்சிகள் ரத்தானது முதல் மூன்று நாட்களில் தமிழ் நாட்டில் சொல்லிவிட வா மொத்த வசூல் சொல்லக் கூடிய கௌரவமான தொகை இல்லை.