காயங்குளம் கொஞ்சுணி சாதனை வசூல்

கடந்த வாரம் மலையாளத்தில் மோகன்லால் – நிவின்பாலி இணைந்து நடித்த காயம்குளம் கொச்சுன்னி படம் முந்தைய பல மலையாள பட வசூல் சாதனைகளை முறியடித்து பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்து வருகிறது

ஏற்கனவே முதல்நாளில் மட்டும் கேரளாவில் 5.6 கோடி வசூலித்து சாதனையை நிகழ்த்தியது  இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ 34 கோடி வசூலித்துள்ளது. இதுவும் மலையாள சினிமாவுக்கு புதிய சாதனை தான்.

குறிப்பாக பாகுபலி-2, புலி முருகன் ஆகிய படங்கள் 20நாட்களில் 50 கோடி வசூலித்தது தான் குறுகியகால சாதனையாக இருந்தது.

தற்போதைய நிலவரப்படி பார்த்தால் பத்து நாட்களுக்குள்ளாகவே இந்தப்படம் 50 கோடி வசூலித்த முதல் படம் என்கிற சாதனையையும் சொந்தமாக்கி விடும் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.