பாரதிய ஜனதா கட்சியால் சாதனை நிகழ்திய மெர்சல்

இந்த வருடம் அக்டோபர் 18 அன்று வெளியான மெர் சல் திரைப்படம்.
சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகளுடன் மூன்று வகையான வேடங்களில் முதன் முறையாக விஐய்நடித்த படம் “மெ ர்சல்”

தேனாண்டாள் பிலிம்ஸ் 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்த மெர் சல் இந்நிறுவனத்திற்கு 100வது தயாரிப்பு என்பதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு கூடி இருந்தது.

படம் தொடங்கியது முதல், டைட்டில் பிரச்சினை, பைனான்ஸ் பிரச்சினை என்று ஏகப்பட்ட தடைகளை கடந்து ரீலீஸ் ஆனது மெர் சல்.

இயக்குனர் கொடுத்த பட்ஜெட்டை விட தயாரிப்பு செலவு கூடுதலானதால்தயாரிப்பாளரின் சிரமம் அறிந்து சம்பளத்தில் ஐந்து கோடியை விஜய் குறைத்துக் கொண்டார்.

பட்ஜெட் அடிப்படையில் தயாரிப்பாளர் விலை கூறியதால் அவுட் ரேட் முறையில் வியாபாரம் முடியவில்லை. வேறு வழியின்றி
தமிழ்நாடு முழுவதும் விநியோக அடிப்டையில் தயாரிப்பு நிறுவனம் துணிந்து வெளியிட்டது.

G STவரி சம்பந்தமாக சரியான புரிதல் இல்லாமல் சிங்கப்பூர் GSTவரியுடன் ஒப்பிட்டு படத்தில் வசனம் இடம்பெற்றது பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை படம் எதிர்கொண்டது.

பாஜாக தமிழக தலைவர் தமிழிசை மெர் சல் படத்தை கடுமையாக விமர்சித்ததுடன், GSTசம்பந்தமான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என போர் கொடி தூக்கினார்.

தொலைக்காட்சிஊடகங்கள் இதனை தங்கள் நிகழ்ச்சியில் தொடர்விவாத பொருளாக்கியதன் விளைவு ஒரே நாளில் ” மெர் சல் உலகம் முழுவதும் பிரபலமானது.

விஜய் படம் பார்க்க விரும்பாதவர்கள், சினிமா கொட்டகை பக்கம் வராதவர்கள் எல்லாம் அப்படி என்னதான் இருக்கு என்று மெர்சல் படம் பார்க்க தியேட்டர்களில் குவிந்தனர்.
முதல் வாரத்தில் 100 கோடி ரூபாயைவசூலித்த முதல் தமிழ் படம் ஆனது மெர் சல் .

தமிழகத்தில் 525 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இப்படம் சுமார் 150 கோடி ரூபாய்வசூல் செய்துசாதனை நிகழ்த்திய மெர்சல் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலான வருமானத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

GSTவரியை விமர்சனம் செய்ததால் வசூல் அதிகரித்ததோ அதே
G STவரி விதிப்பால் லாபம் குறையும் நிலையை சந்தித்த முதல் தமிழ் படம் மெர்சல்.

சுமார் 80 ( விநியோக தரப்பில் கூறுவது 70 கோடி ரூபாய்)கோடி ரூபாய் தமிழ் நாட்டில் வருவாயாக பெற்ற மெர் சல்G ST, கேளிக்கை வரி இல்லாமல் இருந்திருந்தால் கூடுதலாக 25 கோடி வருவாய் கிடைத்திருக்கும்.