பிக்பாஸ் – குமுறிய கமல்

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார்.

அதன்படி இதுவரை ஷாரிக், பொன்னம்பலம், மஹத், டேனியல், வைஷ்ணவி, நித்யா உள்ளிட்ட 8 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
அதன்படி இந்த வார வெளியேற்றத்தில் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் ஐஸ்வர்யா காப்பற்றப்பட்டதாக அறிவித்தார் கமல்.

அதற்கு காரணமாக யாரும் சரியாக ஓட்டுப் போடுவதில்லை. அதனால் நாம் யாரைக் காப்பாற்ற நினைக்கிறோமோ அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று புள்ளி விவரத்தோடு விளக்கினார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சென்றாயன் வெளியேறியிருக்கிறார்.

இது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் இதுபற்றி…

“”வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு.
பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்.””

என்று கூறியிருக்கிறார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு நிறைய ஆதரவும் அதே அளவு எதிர்ப்புகளும் வருகின்றன. கமல் ரசிகர்கள் இயக்குநர் நவீனை திட்டித் தீர்க்கிறார்கள்.