ரஜினி – ரஞ்சித் ஆடும் அரசியல் ஆடு புலி

காலா திரைப்படம் தொடங்கியதில் இருந்து ரீலீஸ் வரை அதில் கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத அரசியல் பயணித்து வருகிறது.

ரிலீஸ் தேதியை அறிவித்ததும் அனைத்துத் தளங்களிலும் காலா படம் பற்றிய செய்தியும், விவாதங்களும் பற்றிக்கொள்ளும் என்று திடமாக நம்பினார் தயாரிப்பாளர் தனுஷ்.

பலவிதத்தில் காலா படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிறவைத்து,10.02.2018 இரவு 7 மணிக்கு
ஏப்ரல் 27ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என்று அறிவித்தார் தனுஷ்.

அறிவிப்புக்கு பின் அனைத்து ஊடகங்கள், பொதுவெளியில்எங்கும் காலாவைப் பற்றிய பேச்சுத்தான். ஆனால், தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்ததுபோல, இந்த அறிவிப்பு காலாவுக்கு புரமோஷனாக அமையவில்லை.

காலா படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு ஆதரவாக அமைந்தது.

ரஜினியின் காலா என்பதைவிடவும், ரஞ்சித்தின் காலாவுக்காக காத்திருப்பதாகப் பெரும்பாலான ரசிகர்களின் குரல் சமூக வலைதளங்களில் பதிவானது. ரஜினிகாந்த் நடித்த படங்களை இயக்கிய மணிரத்னம், ஷங்கர் இவர்களுக்கு கூட இந்தளவு முக்கியத்துவம் கிடைத்தது இல்லை

அட்டக் கத்தி, மெட்ராஸ், கபாலி என மூன்று படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் ரஞ்சித்.

தமிழ் சினிமா வில் வெற்றிகரமான இயக்குனர்கள் கூட பேச தயங்கிய போது, இத்தனை ஆண்டுகளாக சினிமா ஒதுக்கிவைத்திருந்த அரசியலை ரஞ்சித் படங்கள் பேசியதால் ரஞ்சித் கவனம் ஈர்த்திருக்கிறார்

தமிழ் சினிமாவில் ரஜினி என்ற மிகப்பெரிய பிம்பத்தைத் தாண்டி ரஞ்சித் வெளியே தெரிவது , கவனம்ஈர்ப்பது சாதாரணமானது இல்லை.

ரஜினியின் பிரபலத்தை தான் பேச நினைக்கும் அரசியலுக்கு லாவகமாகமாக பயன்படுத்த ரஞ்சித்தால் முடிந்தது. அதனை அறிந்த பின் அடுத்த பட வாய்பையும்வழங்கி ரஞ்சித்தின் அரசியலை தனக்கு சாதகமாக்கி கொண்ட ரஜினியின் அரசியல் சாதூர்யத்தை என்னவென்பது.