ரஞ்சித்தின் அரசியலை தனக்கு சாதகமாக்கிய ராஜினி

காலா திரைப்படம் தொடங்கியதில் இருந்து ரீலீஸ் வரை அதில் கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத அரசியல் பயணித்து வருகிறது.

ரிலீஸ் தேதியை அறிவித்ததும் அனைத்துத் தளங்களிலும் காலா படம் பற்றிய செய்தியும், விவாதங்களும் பற்றிக்கொள்ளும் என்று திடமாக நம்பினார்கள் மாமனாரும் (ரஜினி) மருமகனும் (தனுஷ்) அதனால்தான் பலவிதத்தில் காலா படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிறவைத்து, கடைசியில் 10.02.2018 இரவு 7 மணிக்கு வெளியிட்டார்.
ஏப்ரல் 27ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என்று.

அறிவிப்புக்கு பின் அனைத்து ஊடகங்கள், பொதுவெளியில்எங்கும் காலாவைப் பற்றிய பேச்சுத்தான். ஆனால், தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்ததுபோல, இந்த அறிவிப்பு காலாவுக்கு புரமோஷனாக அமையவில்லை.

காலா படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு ஆதரவாக அமைந்தது.

ரஜினியின் காலா என்பதைவிடவும், ரஞ்சித்தின் காலாவுக்காக காத்திருப்பதாகப் பெரும்பாலான ரசிகர்களின் குரல் சமூக வலைதளங்களில் பதிவானது. மூன்று படங்கள் மட்டுமே இயக்கி உள்ள இயக்குநர். மூன்றும் பெரும் வெற்றி படங்கள் இல்லை. இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக சினிமா ஒதுக்கிவைத்திருந்த அரசியலை ரஞ்சித் படங்கள் பேசியதால் ரஞ்சித்துக்கு இந்த ஆதரவு கிடைத்திருக்கிறது. சினிமாவில்ரஜினி என்ற மிகப்பெரிய பிம்பத்தைத் தாண்டி ரஞ்சித் வெளியே தெரிவது சாதாரணமானது இல்லை. ரஜினியின் பிரபலத்தை தான் பேச நினைக்கும் அரசியலுக்கு லாவகமாகமாக பயன்படுத்த ரஞ்சித்தால் முடிந்தது. அதனை அறிந்த பின் அடுத்த பட வாய்பை வழங்கி ரஞ்சித்தின் அரசியலை தனக்கு சாதகமாக்கி கொண்ட ரஜினியின் அரசியல் சாதூர்யத்தை என்னவென்பது.

Share:Share on FacebookTweet about this on TwitterPin on Pinterest