சர்க்கார் ரீலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.

இப்படத்திற்கு தணிக்கை முடிவடைந்து ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

“”நவம்பர் 6ம் தேதி தீபாவளி தினத்தன்று ‘சர்கார்’ உலகம் முழுவதும் வெளியாகிறது””

தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு இப்படம் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இதுவரை தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாத சில நாடுகளிலும் இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

விஜய் நடித்துள்ள படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்தின் வியாபாரம் நடைபெற்றுள்ளது. அதற்கேற்றபடி இப்படத்தின் வசூலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.