சீமராஜா போலந்துக்கு போனது எப்படி

ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படம்தான் ஒரு நாட்டில் திரையிடப்பட இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படம் ‘சீம ராஜா’. சமந்தா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதே படத்துடன் சேர்ந்து ‘96’, ‘யு டர்ன்’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களும் ரிலீஸாக இருக்கின்றன.

‘சீம ராஜா’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டிலும் ‘சீம ராஜா’ படம் ரிலீஸாக இருக்கிறது. அங்கு சுமார் 10 ஆயிரம் பேர் தமிழ் பேசக்கூடியவர்கள் இருக்கின்றனர். அதனால், அங்கு எப்போதாவது தமிழ்ப் படங்கள் திரையிடப்படும்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா நடித்த படங்களே இதுவரை போலந்து நாட்டில் திரையிடப்பட்டுள்ளன. அதில் சிவகார்த்திகேயன் படமும் இணைந்திருக்கிறது.,

செவன்த் சென்ஸ் சினிமாட்டிக்ஸ் என்ற விநியோக நிறுவனம், போலந்து நாட்டின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது. இதுதான் இந்த நிறுவனம் விநியோகம் செய்ய இருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.