சிங்கம் – 3 நஷ்டம்?

ஸ்டுடியோ கீரீன் தயாரிப்பில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சூரி நடித்து வெளியான படம் சிங்கம் – 3 கதை, திரைக்கதை வசனம் எழுதி முந்தைய சிங்கம் 1, 2, பாகங்களை இயக்கிய ஹரி இயக்கியிருந்தார். 2016 தீபாவளி நீலீஸ் என கூறி சுமார் 55 கோடிக்குவியாபாரம் செய்யப்பட்டது.பல்வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டு இறுதியாக அன்று படம் வெளியானது. படம் சுமார் ரகம் என்றாலும்முதல் நான்கு நாட்கள் மட்டும் தியேட்டர்களில் வசூல் கல்லா கட்டியது. தமிழக அரசியல் சூழ்நிலை, முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா, அதிமுக கட்சியில் அடுத்தடுத்த திடீர் திருப்பங்கள் காரணமாக மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவது குறைந்து போனது. அதிக எம்.ஜி.அட்வான்ஸ் கொடுத்து சிங்கம் – 3 திரையிட்ட தியேட்டர்கள் வசூல் குறைவாக இருப்பினும் இரண்டாவது வாரமும் படத்தை ஒட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.சேலம் ஏரியா 3.75 கோடிக்கு வாங்கிய விநியோகஸ்தருக்கு வசூலான பங்குத் தொகை 1.75 கோடி பாக்கி 2 கோடி நஷ்டம் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு. இதே போன்ற வசூல்தான் தமிழ்நாடு முழுவதும் ஆகியுள்ளது.சிங்கம் – 3 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கோவை ஏரியா திரையரங்கு உரிமையா ளர்கள் சங்க தலைவரும். பிரபல விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணி தலைமையில் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சிங்கம் – 3 படத்தை தமிழ்நாட்டில் வாங்கிய விநியோகஸ்தர் கஞக்கு 40% வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனை திரும்ப பெற ஞானவேல்ராஜா, நடிகர் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அவர்கள் ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால், அடுத் “சூர்யா” நடித்து வெளிவரும் படத்தை திரையிடஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.