சீறாத சிங்கம் – 3

தமிழகத்தில் மூன்று வருட போராட்டங்களுக்கு பின் தமிழக மக்களின் தன் எமுச்சி போராட்டம் காரணமாக நேற்றைய தினம் பாலமேட்டில் ஜல்லிகட்டு காளைகள் சீறிப் பாய்ந்தன. அதே போன்று கடந்த இரண்டு வருடங்களாக எப்போது ரீலீஸ் என தடுமாறிக் கொண்டிருந்த சிங்கம் — 3 உலகமெங்கும் ரீலீஸ் ஆனது. பல்வேறு பிரச்சினைகளால் முடங்கி கிடந்த சிங்கம் – 3 சினம் கொண்டு சீறும் என எதிர் பார்த்து காத்திருந்த தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் சிங்கம் – 3 படத்திற்கு தமிழகம் முழுவதும் ஓபனிங் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன், சூரி என முதன் நிலை நட்த்திரங்கள் நடிப்பில் சிங்கம் 1 ,2, படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் ஸ்டுடியோ கீரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பான சிங்கம் – 3 அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டிருந்தது.

தென் இந்தியாவில் ரஜினிகாந்த்துக்கு அடுத்து சூர்யா தான் வசூல் சக்கரவர்த்தி என்று சமீபத்தில் நடைபெற்ற சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் மொக்கையான படங்களுக்கு கூட ரசிகர் மன்ற பேனர்கள், ஆரவாரமான ரசிகர் கூட்டம் என முதல் நாளில் தியேட்டர்களில் களை கட்டும்.கல்லா நிறையும்.படம் சரியில்லை என்றால் திங்கட் கிழமைக்கு பின்னரே வசூல் குறையும். நடிகர் சூர்யாவுக்கு என ரசிகர் கூட்டம் தமிழகத்தில் இருந்தும் ஓபனிங் இல்லாதது ஏன் என தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்த போது…….

சூர்யா படங்களுக்கு இருக்க வேண்டிய ஒபனிங் இல்லை அடுத்தடுத்த காட்சிகளில் வசூல் கூடி இருக்கிறது ஆனால் இது ஆரோக்கியமான வசூல் இல்லை. பல தேதிகள் அறிவிக்கப்பட்டு படம் வரவில்லை என்பதால் ரசிகர்களிடம் வழக்கம் போல படம் வராது என்ற நினைப்பும், மன சோர்வுக்கும் ஆளாகி விட்டனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கு சூர்யா ஆதரவானவர் என்கிற பிரச்சாரம்  இளைஞர், மாணவர் மத்தியிலிருந்து மறையவோ, மாறவோ இல்லை என்பதும் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன. இளைஞர், மாணவர்கள் மத்தியில் ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின் மெளனமாக கருத்து மாற்றங்கள் ஏற்பட்டு இந்திய பண்பாடு, தமிழ் கலாச்சாரங்களின் மீது ஈரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்கு எதிராக எந்த நடிகர் இருந்தாலும் வசூல் பாதிக்கும் என்கின்றனர் தியேட்டர் வட்டாரங்களில். இனியாவது தாங்கள் நடிக்கும் விளம்பரபடங்களின் உண்மை தன்மை அறிந்து நடிகர் நடிகைகள் நடிப்பது நல்லது. குறிப்பாக தமிழக இயற்கை வளங்களை, பண்பாட்டு தளங்களை சேதாரப்படுத்தும் நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிப் பதைதமிழ் திரையுலகினர் தவிர்ப்பது நல்லது என்கின்றனர் விநியோக வட்டாரங்களில். சூர்யாவின் படங்கள் முதல் நாள் சுமார் 15. கோடி வசூலாகும். தயாரிப்பு தரப்பில் முதல் நாள்வசூல் 16 கோடி என்கின்றனர். தமிழ்நாடுதியேட்டர் வட்டாரம் சிங்கம் – 3 முதல்நாள்வசூல் சுமார் 9 கோடி மட்டும் என தகவல் வருகிறது. இன்றைய காலை காட்சி நேற்றைய வசூலில் 60% தான் ஆகியிருப்பதாக கூடுதல் தகவல் வந்துள்ளது.சிங்கிளா வந்த சிங்கம் சீறாமலே போயிருமா ?