விஸ்வரூபம் – II முதல் வாரம் வசூல் என்ன?

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமைவெளியான விஸ்வரூபம் – 2 வசூலில் சாதனை நிகழ்த்தும் என எதிர் பார்க்கப்பட்டது.

தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுமையும் இப்படம் மோசமான வசூலை சந்தித்துள்ளது.

தனக்கு கிடைத்த மேடைகள் அனைத்தையும் விஸ்வரூபம் – 2 படத்தை விளம்பர படுத்த பயன்படுத்திக் கொண்டார். அதே போன்று தனது மைய்யம் கட்சி அமைப்பை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல விஸ்வரூபம் – 2 படத்தில் முதல் ஐந்து நிமிடங்களை பயன்படுத்திக் கொண்டார்

ஆனால் முதல் மூன்று நாட்கள் மட்டும் திரையரங்குகளில் கல்லா கட்டியவிஸ்வரூபம் – 2 திரையிடப்பட்டிருந்த தியேட்டர்கள் திங்கட்கிழமை முதல் வெறிஞ்சோடி காணப்பட்டது

. நகர்புறங்களில் மட்டும் இரண்டாவது வாரமும்
விஸ்வரூபம் – 2 தொடர்கிறது
புற நகர் பகுதிகளில் படம் தூக்கப்பட்டுவிட்டது.

முதல் வார முடிவில் இப்படம் தமிழகத்தில் 14 கோடி வசூல் செய்திருக்கிறதுஎன்கிறது விநியோக வட்டாரம்.

. இதில் தயாரிப்பாளர் அல்லது படம் வாங்கிய விநியோகஸ்தருக்கு கிடைக்க கூடிய பங்குத் தொகை சுமார் சுமார் 10 கோடி.விஸ்வரூபம் படத்தை காட்டிலும் குறைவான வசூல் செய்திருக்கிறது அதன் இண்டாம் பாகம்.