அஜீத் ரசிகர்கள் எதிர்பார்பு என்ன ?

தமிழ் சினிமாவில்லட்சக் கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்கள் மசாலாப் படங்களில் நடிப்பதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கிறார்கள்

ரஜினிகாந்த், விஜய், அஜிதகுமா்ஆகிய மூவருக்கும் தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி வியாபாரமும், வசூலும் இருக்கிறது.

யு டியூப், சமூக வலைத்தளங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில் ரசிகர்களிடம் அவர்களது செல்வாக்கு என்ன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆனால், அவர்கள் சிறந்த கதையை தேர்ந்தெடுப்பதில்லை. நல்ல படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என நினைக்காமல் படம் பார்க்க வரும்அவர்களது ரசிகர்கள்கைதட்டி, விசிலடித்து விட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே கதை தேர்வு செய்து நடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நல்ல சினிமா ஆர்வலர்களால் வைக்கப்படுகிறது

அவர்களது ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாத படங்களில் கூட அவர்கள் நடித்திருக்கிறார்கள்.

அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக முன்னணி ஹீரோக்களுக்குள் இருக்கும் போட்டியில் வசூல்தானவந்ததா என்று மட்டும் பார்க்கப்படுகிறதே தவிர, படத்தின் கதைக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம்இல்லாமல் இருக்கிறது

இந்த விஷயத்தில் முன்னணி ஹீரோக்கள் அனைவருமே காசேதான் கடவுள் என இருக்கிறார்கள்.

அஜித், இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் மூன்று படங்களில் நடித்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.
அஜித்தின் தோற்றத்திற்கும், அவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்புக்கு ஏற்ற விதத்தில் அவர் படங்களை இயக்கவில்லை என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.

‘வீரம், வேதாளம், விவேகம்’ ஆகியவை தரத்தின் அடிப்படையில் சுமாரான படங்கள் என்பதே உண்மை. மிகப் பெரும் வியாபாரம், ஒபனிங் இருந்தும் ப்ளக்பஸ்டர் என ஒரு படம் கூட கூற முடியவில்லை.

அஜித்திடம் இருந்து வரலாறு, என்னை அறிந்தால் போன்ற மிகச் சிறந்த படங்களை எதிர்பார்க்கும் அவருடைய ரசிகர்கள் அவர் வித்தியாசமான இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.