ரஜினிகாந்த் சட்டத்தை கடைப்பிடிக்காமல் கேளம்பாக்கம் போனாரா

0
23

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படமும், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இளைய மகள் சவுந்தர்யா, மருமகன் மற்றும் பேரனுடன் இருப்பது போன்ற புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது. அதுபோலவே அப்பகுதியில் ரஜினி வாக்கிங் செல்லும் சில வினாடி வீடியோவும் வெளியானது.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில்,

போயஸ் கார்டனில் உள்ள வீட்டில்வசித்து வரும் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா என்ற கேள்வி எழுந்து ,சமூகவலைதளங்களில் விவாதமானதுஇதுகுறித்து ஆய்வு செய்தே பதிலளிக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 23) கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கியது தெரியவந்துள்ளது. மருத்துவ அவசரத்திற்காக (medical emergency) கேளம்பாக்கம் ஆர்.கே.பார்ம் ஹவுஸுக்கு செல்வதாகக் குறிப்பிட்டு, கார் டிரைவருக்கும் சேர்த்தே இ-பாஸ் கேட்டிருக்கிறார். இன்று பயணம் செய்வதற்கான பாஸ் அவருக்கு நேற்றே வழங்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் இ-பாஸும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இன்றைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பே ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்று, அங்கேயே தங்கியுள்ளது எப்படி என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது

கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் ரஜினிகாந்த் காலையில் புறப்பட்டு கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்து பொழுதை கழித்து மாலையில் போயஸ் கார்டன் வீட்டுக்கு திரும்பி விடுவது வழக்கம் என்கின்றனர் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில்
கொரானா ஊரடங்கு காலத்தில் ரஜினி என்கிற பிம்பம் ஊடக வெளிச்சத்தில், மக்கள் மத்தியில் காணாமல்போனது. இந்த குழலில் ஆர்வக்கோளாறு காரணமாக அவர் கார் ஓட்டுவது போன்ற புகைப்படத்தை ரஜினி தரப்பில் சமூக வலைதளங்களில் பதிவிட செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் இ.பாஸ் என்கிற விஷயம் இருப்பதை மறந்துபோனது ரஜினி தரப்பு
அப்படி ஒரு கேள்வி எழுந்ததால் இன்று கேளம்பாக்கம் போவதற்கு நேற்றே இ.பாஸ் வாங்கியதாக அதன் புகைப்பட பிரதியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இ.பாஸ் வாங்காமல் கேளம்பாக்கம் போய் வந்ததை திசைதிருப்பிவிட்டுள்ளனர் ரஜினி தரப்பில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here