கொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு

0
80

கொரானா பரவல் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்புகளை திட்டமிட்டபடி நடத்த முடியாமலும் ஏற்கனவே முடிவு செய்த தேதியில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வர முடியாமலும் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர். ரஜினிகாந்தின் அண்ணாத்த படக்குழுவினருக்கும் கொரானா தொற்று ஏற்பட்டு படப்பிடிப்பை முடக்கி உள்ளது. கொரானாவால் காடன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. இந்த படத்தில் ராணா, விஷ்ணு விஷால், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. பிரபுசாலமன் இயக்கி உள்ளார். காடுகளில் படமாக்கி உள்ளனர். இந்த படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வரும் என்று அறிவித்து கொரோனாவால் தாமதமானது. தியேட்டர்களை திறந்ததும் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்பதால் நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து கொரோனாவால் தாமதமாகி வந்த காடன் படத்தின் ரிலீசை தற்போது வருகிற

மார்ச் 26-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here