கமல்-லோகேஷ் கனகராஜ் இணையும் பட அறிவிப்பின் ஆத்திக – நாத்திக பின்ணனி

0
140

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்கப்போகிறார் என்றும் அப்படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில்,நான் இயக்கும் அடுத்த படம் பற்றிய நாளை வெளியிடுகிறேன் என்று நேற்று மாலை அறிவித்திருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கமல் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். கமலின் 232 ஆவது படமென்று சொல்லப்பட்டுள்ள இப்படத்துக்கு தற்காலிகமாக எவனென்று நினைத்தாய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பட அறிவிப்பை தயாரிப்புநிறுவனம் அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால்
 பட அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதலில் அறிவித்தபின் அதற்கு பின்னால் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக பத்திரிகைகளுக்கு செய்தியை அனுப்பியதற்கு பின்ணனி காரணம் என்னவென்று விசாரித்தபோதுநாளை புரட்டாசி மாதம் பிறக்கவிருக்கிறது. பொதுவாக ஆடி,புரட்டாசி ஆகிய மாதங்களில் புதிய விசயங்களைத் தொடங்குவது அல்லது அறிவிப்பது போன்றவற்றைத் திரையுலகினர் செய்யமாட்டார்கள்.அதனால் ஆவணி மாதக் கடைசி நாளான இன்று படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டால் பகுத்தறிவு பேசுகிற கமல், புரட்டாசி மாதத்தைப் புறக்கணித்து மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு இன்று புதியபட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிற விமர்சனம் வரும் என்பதால் கமல் தயங்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் புரட்டாசி மாதத்தில் புதிய பட அறிவிப்பை வெளியிட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரும்பவில்லையாம். எனவே அவர் விருப்பப்படி இன்று அவரையே வெளியிடச் சொல்லிவிட்டாராம் கமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here