லோகேஷ் கனகராஜுன்நிறைவேறிய கனவு

0
51

சினிமாவில் நமக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைப்பதைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இருக்காது. அப்படி ஒரு அனுபவம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ளது. அவர் பல பேட்டிகளில் தனது அபிமான நடிகர் கமல்ஹாசன் என்பதைச் சொல்லியிருக்கிறார். இப்போது அவர் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை நேற்று முதல் ஆரம்பித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பற்றி கமல்ஹாசன், “விக்ரம் படத்தின் முதல் நாள். ஒரு ஹைஸ்கூல் ரியூனியன் போல இருக்கிறது. கடந்த 50 வருடங்களில் படப்பிடிப்பிலிருந்து விலகியிருப்பது இதுவே முதல் முறை. சினிமா படைப்பாளிகள் பலர் கடந்த ஒரு வருடமாக ஆக்ஷனையே பார்க்கவில்லை.

எனது அனைத்து தோழர்களையும், அணியினரையும், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனலில் பணிபுரிவதை வரவேற்கிறேன். குறிப்பாக மிஸ்டர் லோகேஷ் மற்றும் அவரது உற்சாகமான குழுவினர், மற்றும் திறமைசாலிகளான சகோதரர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரையும் வரவேற்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த லோகேஷ், “உங்களுக்கு ‘ஆக்ஷன்’ என்ற வார்த்தையைச் சொல்வது எனக்கு கனவு சார். இந்த ஞாபகத்தை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்வேன். நன்றி, அதிகமான அன்பு உங்கள் மீது சார்,” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here