என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே…

0
92

அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்திய சினிமாவில், தமிழ் சினிமாவில் வந்திருக்கும் ஆயிரக்கணக்கான படங்களில் உடன்பிறப்பே தன்னை இணைத்துக்கொண்டுள்ளது

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியானபாசமலர், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே படங்கள் இன்றுவரைஅண்ணன்-தங்கை பாசத்திற்கு அடையாள சினிமாவாக சுட்டிக்காட்டப்படுவது உண்டு
 அவற்றில் இருந்து மாறுபட்டு சமகால அரசியல், பல்வேறு சமூக அநீதிகளுக்கு எதிராக பேசுகிற படமாக உடன்பிறப்பே இருக்கிறது
 எல்லா உணவு பொருட்களும் காலியாகி போன பின்பு உடனடி உணவு தேவைக்குகைகொடுப்பது ரவை இதனை பயன்படுத்தி என்ன உணவு தயாரிக்கப்படுகிறது, கை பக்குவத்தை  பொறுத்தே அதன் சுவை அமையும் அதுபோன்றுதான்அண்ணன் – தங்கை அக்காள்- தங்கை பாசத்தை திரைக்கதையாக்குவது எல்லாக் காலங்களிலும் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது
ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பதால்அவரைப் பெருமைப்படுத்தும்வகையில்அவருடையஅறிமுகக்
காட்சியை அமைத்திருக்கிறார்கள்
உடன்பிறப்பே தலைப்பிலிருந்தே இது ஒரு பாசக்கதை என்பது படம் பார்க்காமலேயே புரிந்துவிடும். அண்ணன், தங்கை பாசத்தை இருவருமே பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அதை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
கிராமத்தில் சசிகுமார், ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கை. ஜோதிகாவின் கணவர் ஆசிரியராக இருக்கும் சமுத்திரக்கனி. அடிதடி, ஊர் பஞ்சாயத்து என இருக்கும் சசிகுமார் நடவடிக்கை பிடிக்காமல் இருக்கும் சமுத்திரக்கனி, அதனால் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளில் பையனை பறி கொடுக்கிறார். இனி, ஜென்மத்திற்கும் சசிகுமாருடன் உறவு இல்லை என பிரிந்து செல்கிறார். தனது அண்ணனும், கணவனும் சேர மாட்டார்களா என ஏங்கித் தவிக்கிறார் ஜோதிகா. பிரிந்த இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மனிதநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு காட்சிக்கும் உயிர்கொடுத்திருக்கிறார்கள்
உயிர்களைக்காக்கதாலியைக் கழற்றும் துணிவு,  மகளைக் கத்தியால் குத்தியவனுக்கும் பணம் கொடுத்து உதவும் கருணை, மகனா? அண்ணன் மகனா? என்ற மிகக்கடின நேரத்தில் எடுக்கும் முடிவு என எல்லா இடங்களிலும்  ஜோதிகா கதாபாத்திரம் கைதட்டல்பெறுகிறது.
ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார். வேட்டி சட்டை முறுக்குமீசை. நரை என கம்பீரமாக வருகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல அவர்வரும்காட்சிகளும்
பேசும் வசனங்களும் கம்பீரம்தான்.

சர்பத் குடிக்கிறதுன்னா கூட சட்டப்படிதான் குடிக்கணும் என்று சொல்லும் சமுத்திரக்கனி. அழுத்தமான வேடம் அமைதியான  தோற்றம். ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கும் வேடம். அளவாக நடித்திருக்கிறார்.
மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு சூரிக்கு.வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளராக வரும் வேல்ராஜ், வில்லன் கலையரசன், சசிகுமார் மகனாக வருகிற சித்தார்த், ஜோதிகாவின் மகள்  நிவேதிதா சதீஷ், ஆடுகளம் நரேன் ஆகிய அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.அருகிப்போய்க் கொண்டிருக்கும் பாச உணர்வுகளோடு, கடன்தவணை

கட்டாத விவசாயியின் டிராக்டர் வாகனத்தைப் பறித்துச் செல்லும் மார்வாடிக்கு சசிகுமார் நடத்தும் பாடம், நீரை மண்ணுக்குள் தேடாதே வானத்தில் தேடு என்கிற நம்மாழ்வாரின் சொல் ஆகிய சமுதாய அக்கறைகளை அளவோடு கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்

நடிகர் நடிகைகள்:
 சசிக்குமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, வேல ராமமூர்த்தி, கலையரசன், ஆடுகளம் நரேன், வேல்ராஜ், நமோ நாராயணன், சிஜாரோஸ், சித்தார்த், நிவேதிதா சதீஷ், தீபா
தொழில்நுட்ப கலைஞர்கள்:
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: இரா.சரவணன்
இசை : இமான்
ஒளிப்பதிவு : வேல்ராஜ்
படத்தொகுப்பு:ரூபன்
கலை: முஜிபூர் ரஹ்மான்
ஒலிக்கலவை: உதய குமார்
ஒலிவடிவமைப்பு : சச்சின் சுதர்சன்
பாடல்கள்: யுகபாரதி, சினேகன்
சண்டை பயிற்சி : திலீப் சுப்பராயன்
உடைகள்: பூர்ணிமா ராமசாமி
விளம்பர வடிவமைப்பு : கபிலன்
மக்கள்தொடர்பு: யுவராஜ்
தயாரிப்பு : 2D எண்டர்டெயின்மென்ட்
வெளியான நாள்: 14.10.2021
நேரம்: 2 மணி 18 நிமிடங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here