பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படம் தெலுங்கிலும் ரீமேக்காகிறது இப்படம். படத்தில் நாயகன் பவன் கல்யாண்.

இந்தியில் வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில், இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்தார்.

அஜித்தின் ஜோடியாக வித்யா பாலனும், மற்ற கதாபாத்திரங்களில் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள போனி கபூர், தமிழ் ரீமேக்கிற்குப் பின் தெலுங்கு ரீமேக் குறித்த பேச்சுவார்த்தையை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அரசியலுக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருந்த பவன் கல்யாண், இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜூ இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

ஸ்ரீராம் வேணு இப்படத்தை இயக்கவுள்ளார். ஓ மை ஃபிரண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி போன்ற படங்களை இயக்கியவர் இவர்.

அஜித் அளவிற்கு ரசிக பலம் கொண்டுள்ளவர் பவன் கல்யாண். அதனால் ஒரிஜினல் படத்தில் இல்லாத சண்டைக்காட்சி அஜித்திற்காக தமிழில் இணைக்கப்பட்டது போல, தெலுங்கிலும் இணைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
2. வெடிக்க தயாரான தோட்டா

தனுஷ் நடித்து, பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீசாகாமல் இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் உறுதிபடுத்தப்பட ரிலீஸ் தேதியை வேல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் தனுஷ், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் துவங்கியது.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஒன்றாக எண்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவு பெற்று பல மாதங்களுக்கு முன்னரே திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பைனான்சியர்களுக்கும் இடையே எழுந்த கடன் பிரச்சினையின் காரணமாக ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

மிகப்பெரிய வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் நவம்பர் 15 ஆம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் உறுதியாக ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

  1. தற்போது அந்த தேதியிலும் மாற்றம் ஏற்பட்டு நவம்பர் 29 ஆம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேல்ஸ் நிறுவனம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here