பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இலங்கையில்

0
34

கொரானா பரவல் காரணமாக தடைபட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் இலங்கையிலும் சென்னையிலும் தொடங்கஉள்ளதாகக்கூறப்படுகிறது
பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார் மணிரத்னம். இந்தப் படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.இதுவரை நமக்குக் கிடைத்த பிரேக் போதும். இனி ஒரு நாளும் தாமதிக்கக் கூடாது. படப்பிடிப்புக்குக் கிளம்புங்கள் என்று மணிரத்னம் கூறியுள்ள நிலையில், படக்குழுவினர் அடுத்த சில வாரங்களில் இலங்கை செல்ல உள்ளதாகவும், அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு சென்னையிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரே மூச்சில் படப்பிடிப்பு தொடரும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here