விஜய் நடிக்கும் படத்தின் இயக்குனர் நெல்சன் சம்பளம்?

0
162

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குகிறார்இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை.அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் சுமாரானவெற்றியை பெற்றது.
அதனால், இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனை  இயக்கும்

வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அவர்கள் இருவரும் இணைந்துள்ள டாக்டர் படத்தின் பணிகள் இன்னும் முடிவடையவில்லைஇன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியிருக்கிறது
இந்நிலையில் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும்
வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

அவருடைய இந்த வளர்ச்சியை அவர் அருகில் இருப்பவர்களே வியப்புடன் பார்க்கும் நிலையில் விஜய் 65 படத்துக்காக அவர் வாங்கவிருக்கும் சம்பளத்தைக் கேட்டு ஆச்சர்யமும், பொறாமையும் ஏற்பட்டிருக்கிறது தமிழ் திரையுலகில்
முதலிரண்டு படங்களுக்கும் இலட்சங்களில் சம்பளம் வாங்கிய அவருக்கு இந்தப்படத்திற்காக ஆறு கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முதல்படம் நயன்தாரா அடுத்தபடம் சிவகார்த்திகேயன் மூன்றாவது படம் விஜய் என்பதே பெரிய வாய்ப்பு என்பதோடு சம்பளமும் ஆறு கோடி என்று செய்தி வருவதால் அவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here