சரவணா ஸ்டோர் தயாரிக்கும் படத்தில் நாயகனாக அண்ணாச்சி சரவணன்

0
123
சரவணா ஸ்டோர் விளம்பரபடங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்கும்திரைப்படத்தின்
தொடக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜேடி – ஜெர்ரி
இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்இந்தப்படத்தை தயாரிக்கின்றது
முக்கிய கதாபாத்திரத்தில்
பிரபு விவேக் ஆகியோர் நடிக்கின்றனர் கதாநாயாகியாக ஈத்திகாதிவாரி
நடிக்கின்றார்
எளிமையான இந்த பூஜையில் பிரபல இயக்குனர்எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டு வாழ்த்தினார்
சரவணா ஸ்டோர்
தங்களது வியாபார விளம்பரத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள் 
 
இதில் பெரும்பாலும் தமிழ்சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் நடிப்பது வழக்கம் அவர்களோடு இணைந்து சரவணன் நடிக்கத் தொடங்கினார் 
 
இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில்
கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது அதுவே அந்த விளம்பர படங்கள் பிரபலமாக காரணமாக அமைந்தது 
 
தொலைக்காட்சியில் ஒளிபரப்பகூடிய விளம்பரங்கள் வருகின்றபோது சேனல் மாற்றுவது பார்வையாளர்களின் வாடிக்கை 
 
சரவணன் நடிக்கும் விளம்பரப் படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்ஒளிபரப்பப்படுகிறபோது அதனை எல்லோரும் ரசித்து பார்க்க தொடங்கினார்கள்
இவருடன் விளம்பரபடங்களில் இணைந்து நடித்த முன்னணி கதாநாயகிகள் சினிமாவில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்ககேட்டபோது எல்லோரும் மறுத்துவிட்டார்கள் என்பது செய்தி
விக்கிரமாதித்தன் போன்றுவிடா முயற்சியாக
ஒருவழியாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு தொடங்கிவிட்டார் விளம்பரங்களை கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கும் சரவணன் தான் ஹீரோவாக நடிக்கும் சினிமாவை பிரமாண்டத்தின் உச்சமாகஇருக்கின்ற வகையில் தயாரிப்பார் என்றுதமிழ் சினிமா வட்டாரம் கூறுகிறது
 
 தமிழ் சினிமாவிற்கு புதிய முதலீட்டாளர்கதாநாயகன் வருகை தந்திருக்கிறார் வாழ்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here