லோகேஷ் கனகராஜுடன் இணையபோவது ரஜினியா-விஜய்யா?

0
35

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ கனகராஜ் ஆகிய நால்வரும் தான் தமிழ் சினிமாவின் அடுத்த மிகப்பெரிய பிரேக்கிங் நியூஸுக்கான அறிவிப்பை வெளியிடப்போகிறார்கள். அது, ரஜினி-கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா அல்லது விஜய்-லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மாஸ்டர் படத்துக்குப் பிறகு உடனடியாக இணையப்போகிறார்களா என்ற இரு அறிவிப்புகளில் ஒன்றாக இருக்கும். இவையெல்லாம் கைகூடியது எப்படி? என்பது பற்றியும் கைகூடாமல் போவதற்கான வாய்ப்பு என்ன என்பது பற்றியும் சில கேள்விகளுடன் இந்த இரு தரப்புக்கும் நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இங்கே

கமலிடம் லோகேஷ்

கனகராஜ் ஒரு கதைசொல்லியிருக்கிறார். கைதி திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய அலையை உருவாக்கியது. அந்த அலை ஆழ்வார்பேட்டை பக்கமும் அடித்தது. அப்போது, லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கின் மினிமம் கேரண்டி கமலை இம்ப்ரெஸ் செய்தது.
எந்த செட்டும் போடாமல், இயற்கையான சூழலிலேயே திரைப்படத்தை எடுத்து முடிக்கக்கூடிய அளவுக்கு கச்சிதமான இயக்குநராக லோகேஷ் இருப்பதை அறிந்த கமல் உடனடியாக அவரை அழைத்து கதை கேட்டார். யாருக்கு கதை என்று லோகேஷ் கேட்டபோது, பக்கா கமெர்ஷியல் கதையாகவும் கைதி திரைப்படத்தை விட அதிரடியும், விறுவிறுப்பும் வேண்டுமென்று கமல் கேட்டபோது, ரஜினி சாருக்கு ஒரு கதை இருக்கு என்று ஒரு கதையை சொல்லியிருக்கிறார்.

சரி நீங்கள் செல்லுங்கள் செய்தி வரும் என கமல் சொல்லியனுப்ப, சில நாட்களிலேயே ரஜினியுடன்-கமல் இணைகிறார் என்ற செய்தி பரவியது என்கின்றனர் கமல் தரப்பில்.

கைதி திரைப்படம் மேக்கிங்கில் இருந்தபோதே லோகேஷிடம் மாஸ்டர் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொல்லிவிட்டார் விஜய். அதன்பிறகு வெளியான பல தகவல்களையும் நம்பாமல் இருந்தாலும், கமல்-ரஜினி இணையும் படத்தை லோகேஷ் இயக்குகிறார் என்ற செய்தி விஜய்க்கு தெரியவந்த சில நாட்கள் கழித்து இருவரும் பேசியிருக்கிறார்கள்.

கதை சொல்லியிருப்பது உண்மை தான் என்று லோகேஷ் கூறியதும், நான் இன்னொரு படம் பண்ணலாம் என்று பார்த்தேனே என்று கூறி இன்னொரு கதையையும் விஜய் கேட்டிருக்கிறார்.

அந்தக் கதையும் பிடித்துப்போக ஒருவேளை ரஜினியுடன் இணையும் படம் கைகூடவில்லை என்றால் இந்தப்படத்தையும் உடனே தொடங்கி முடித்துவிடுவோம் என்று விஜய் கூறியதால் அந்தக் கதையையும் தயார் செய்யும் பணியில் லோகேஷின் டீம் இறங்கியிருப்பதாகக் கூறுகின்றனர் லோகேஷ் தரப்பினர்.

மில்லியன் டாலர் கேள்வியாக தமிழ் சினிமாவில் சுற்றிக்கொண்டிருப்பது இந்தக் கேள்வி தான். கமல் தரப்பில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் ஷூட்டிங்குக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது.

ஆனால், ரஜினியோ சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அவரது 168ஆவது படத்தில் பயங்கர பிசியாக இருக்கிறார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த திரைப்படம் என்பதால், பெரிய வீடு போன்ற செட் அமைத்து ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது
எப்படியும் இன்னும் இரண்டு மாத ஷூட்டிங் பெண்டிங் இருக்கிறது என்கின்றனர் ஹைதராபாத்தில் இருக்கும் படக்குழுவினர். சென்னையில் நடைபெற்று வரும் மாஸ்டர் ஷூட்டிங்  முடிந்துவிட்டது. ,
படத்துக்கான டப்பிங்கைத் தொடங்கிவிட்டார் லோகேஷ் ஏப்ரல் 9 அன்று மாஸ்டர் ரிலீஸ் உறுதி என்பதால் மே மாத இறுதிக்குள் அடுத்த படத்தையும் விஜய் தொடங்கிவிடுவார்.
ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் ரஜினியின் ஷூட்டிங் முடிந்து அவரும் தயாராகிவிடுவார் என்பதால் எந்தப் படம் முதலில் முடிக்கப்படும் என்பதில் ஒரு சிக்கல் நிலவுகிறது என குழம்புகின்றது விஜய் தரப்பு.
விஜய் தரப்பிலிருந்து லோகேஷ் கனகராஜுக்கு அதிக அழுத்தம் தரவேண்டாம் என்று விரும்பி ரஜினியின் படம் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்குள் ஓகே ஆகிவிட்டால் அடுத்த படத்தில் இணைவோம் என்று சொல்லப்பட்டுவிட்டது.

அதற்காகத்தான் ஒரு பேக்-அப் பிளானாக சுதா கொங்கராவிடமும் கதை கேட்டு ஓகே செய்து வைத்திருக்கிறார் விஜய். ஒருவேளை ரஜினியின் படம் ஒர்க்-அவுட் ஆகவில்லை என்றால் விஜய்-லோகேஷ் படம் உடனடியாகத் தொடங்கிவிடும் என்கின்றனர் லோகேஷுக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினிக்காக லோகேஷ் கூறியது ஒரு அரசியல் கதை என்கின்றனர் கமல் தரப்பினர். அந்தப்படத்தில் மே மாதத்தில் நடிக்கத் தொடங்கினால் வருட இறுதிக்குள் படம் தயாராகிவிடும். ஆனால், 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர்; அதாவது 2021 மார்ச் மாதத்துக்கு நெருக்கத்தில் இந்தத் திரைப்படம் வந்தால் ரஜினியின் அரசியல் மைலேஜுக்கும் இந்தப்படம் உதவும் என்பது ரஜினியின் கணக்கு.

ஆனால், கமல் தரப்பில் அத்தனை காலம் படத்தை ஹார்ட் டிஸ்குக்குள் மூடி வைக்கமுடியாது என்பது ரஜினிக்கு நன்கு தெரியும் என்கின்றனர். காரணம், படமெடுக்க பணம் இல்லாததாலேயே பல புராஜெக்டுகளை பாதியில் நிறுத்தியிருப்பதாகக் கமல் சொல்லி அதற்கான ரஜினியின் உதவியாகவே ராஜ்கமல் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார் ரஜினி என்கிறது ஆழ்வார்பேட்டை தகவல்.
எனவே, ரஜினி தெளிவான ஒரு கால்ஷீட் தேதியைக் கொடுக்காத வரைக்கும் ரஜினி-கமல்-லோகேஷ்-விஜய் ஆகிய நால்வரில் யார் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்பதை உறுதிபடுத்தமுடியாது என்பதை அறிந்து அமைதியாக இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here