செல்வராகவன்-சந்தானம் இணையும் மன்னவன் வந்தானடி

0
37

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்திலதொடங்கப்பட்டது. முதல்கட்டப்படப்பிடிப்புஐதராபாத்தில் நடைபெற்றது.அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார்.
பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது.
அதன்பின், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் நடக்காமல் இருந்தது. இப்போது அந்தப் படத்துக்குவிடிவுகாலம்பிறந்திருப்பதாகச்சொல்லப்படுகிறது.இப்படத்தின் சிக்கல்களைப் பற்றி கேட்டறிந்து கொண்ட தயாரிப்பாளர் வருண் மணியன், அவற்றைச் சரி செய்து படத்தைமுடித்துவெளியிடமுன்வந்திருப்பதாகச்சொல்லப்படுகிறது.
இப்போது சந்தானம் வரிசையாகச் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். செல்வராகவன் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அவற்றின் வேலைகள் பாதிக்கப்படாமல் இந்தப்படத்தை எடுத்து முடிக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here