கலங்கும் கலைப்புலி தாணு சீறும் சிங்காரவேலன்

0
351

தமிழ் சினிமாவில் அனைத்து பிரிவினரையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் படைத்த அமைப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த சங்கத்தின் தலைவராக தேர்தல் மூலம் வெற்றிபெற்று யார் பொறுப்புக்கு வந்தாலும் அவர் தலைமையிலான நிர்வாக குழுவை ஆரோக்கியமாக இயங்கவிடாமல் எதிர்தரப்பினர் குடைச்சல் கொடுப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை ஒரு”தொழிலாகவே” செய்துவந்தனர்

கடந்த முறை நடிகர் விஷால் தலைவராக தேர்ந்தடுக்கப்பட்ட பின்னர் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இருவரும் விஷால் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் இதன் காரணமாக நிர்வாக குழுவை கலைத்து விட்டு தமிழக அரசு தனி அதிகாரி ஒருவரை நியமித்து சங்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இயக்குனர் பாரதிராஜா தலைமையில் 11 பேர் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்றை அரசாங்கம் நியமித்தது இந்த குழு தயாரிப்பாளர்கள் நலன் காப்பதைகாட்டிலும் தங்கள் நலன் சார்ந்த நடவடிக்கை, நாட்டாமை தனம் செய்வதில் தீவிரமாக செயல்படுகிறது என்கிற குற்றசாட்டு தயாரிப்பாளர்களால் எழுப்பபட்டது ஒரு வழியாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு அமுல் ஆனதால் மொத்த திரைதுறையும் முடங்கிபோனது கடந்த நான்கு மாத காலமாக படப்பிடிப்பு, படங்கள்வெளியீடு, என எதுவும் இல்லை
திரையரங்கை திறக்கவும், படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அரசிடம் முறையிட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இல்லை கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தை இலவசங்கள் பெறுவதற்கான நிவாரண மையமாக பயன்படுத்தி வந்தது கொரானா ஊரடங்கு காலத்தில் வெளிச்சத்துக்கு வந்தது முடங்கிபோன சினிமாவை மீட்டெடுப்பது என்பதை பற்றி பேசுவதை காட்டிலும், வெவ்வேறு தொழில் செய்துவருபவர்கள்,இனிமேல் எப்போதும் படம் தயாரிக்க போவதில்லை என்கிற நிலையில் வாக்குரிமை உள்ள தயாரிப்பாளர்கள் சுமார் 1100 இவர்களது கோரிக்கை அனைத்தும் மாதந்தோறும் பென்சன், அவ்வப்போதுநிவாரணம், மருத்துவஇன்சூரன்ஸ் பற்றியே இருந்தது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக பொறுப்புக்கு வருபவர்கள் இவர்களது ஆதரவு வாக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது உண்மையிலேயே சினிமாவை நேர்மையான தொழிலாக, அதனை நேசித்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இந்த சூழலை தவிர்க்க விரும்பி பாரதிராஜா தலைமையில்”தமிழ் திரைப்பட
செயல்படும் தயாரிப்பாளர்கள் சங்கம்” ஒன்றை தொடங்கியுள்ளனர் சுமார் 100 உறுப்பினர்கள் மட்டுமே இருக்ககூடிய இந்த அமைப்புக்கு எதிராக கலைப்புலிதாணு, தேனான்டாள் முரளி ராமசாமி, கமீலா நாசர் ஆகியோர் தலைமையில்06.08.2020 காலை 11 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள திரைப்பட வர்த்தக சபையில் 50 க்கும் மேற்பட்டோர் கூடி பாரதிராஜா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது தலைமையில் தொடங்கப்பட்டுள்ள சங்க அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கதனி அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர் அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கலைப்புலி தாணு, பாரதிராஜா சமாதானத்திற்கு முன்வந்தால் மற்ற பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்திக் கொண்டு, தலைவர் பதவிக்கு அவரையே ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் தயார் என்று பேசினார்.
இதுதொடர்பாக குரல்பதிவு வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சிங்காரவேலன், பாரதிராஜா உள்ளிட்டோரை தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தனி அதிகாரியிடம்  மனு கொடுத்துவிட்டு வெளிப்படையாக, காலில் விழுகிறேன் புது சங்கம் வேண்டாம் என்று பேசுகிறார் கலைப்புலி தாணு.பாரதிராஜா தலைமையில் 50 பேர், தாணு தலைமையில் கூடிய 50 பேர் தவிர 1251 உறுப்பினர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக யாரையும் ஒருமனதாகத் தேர்வு செய்ய நாங்கள் தயாராக இல்லை. தேர்தலில் போட்டியிடுவது உறுதி.இவ்வாறு சிங்காரவேலன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here