சூரரைப் போற்று ஹரி அறிக்கை சூர்யா அதிர்ச்சி திரையரங்குகள் மகிழ்ச்சி

0
36

சூர்யா 2D நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது.

அப்போதிருந்து திரையுலகில். சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

சூர்யாவை வைத்து ஆறு,வேல்,சிங்கம்,சிங்கம்2,சிங்கம்3 ஆகிய படங்களை இயக்கிய ஹரி இப்போது அருவா என்கிற படத்தை சூர்யாவை நடிப்பில் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப்போற்று படம் நேரடியாக இணையத்தில் வெளியாவதற்கு இயக்குநர் ஹரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது….

மதிப்பிற்குரிய திரு.சூர்யா அவர்களுக்கு,

உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விசயங்கள்.ஒரு ரசிகனாக உங்கள் படத்தைத் தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல.

நாம் செர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம்.அதை மறந்துவிட வேண்டாம்.

சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம்.தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் தியேட்டர் என்கிற கோயிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை.படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான்.இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும்வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் ஹரியின் கடிதத்தாளில் அவர் கையொப்பத்துடன் வெளியாகியிருக்கும் இக்கடிதம் நடிகர் சூர்யா தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here