தமிழ் சினிமாவை கலங்கடித்த பொய்யான நிதிமோசடி குற்றசாட்டு

0
160

கடந்த இரண்டு நாட்களாக சூர்யாவின் உறவினரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம், முன்னணி விநியோகஸ்தர் சேலம்7G சிவா ஆகியோர் மீது பணமோசடி புகார் காரணமாக எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற செய்திதமிழ் சினிமாவில் சூறாவளியாக சுற்றிவந்தது அது சம்பந்தமாக சில ஊடகங்களில் செய்தி நேற்று இரவு வெளியானது இதன் உண்மை தன்மையை விசாரித்த போது

சேலத்தைச் சேர்ந்த நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் ‘பைன் டெக்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கி,  நடத்தி வந்துள்ளனர். ஒரு லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.5,000ம் வட்டி தருவதாகவும், இந்த நிறுவனத்திற்கு முதலீட்டாளர்களைசேர்த்துவிட்டால், அவர்களுக்கு வருவாய்க்கு ஏற்ப கமிஷன் தருவதாக சொல்லி மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை பணவசூல் செய்வதற்கு பயன்படுத்தியுள்ளனர்
இத்தொழிலை சேலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என விரிவுபடுத்தி நடத்தி வந்துள்ளனர் ராமநாதபுரம் பகுதியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும் அளவு முதலீடு செய்தததுடன் கமிஷனுக்காகமற்றவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துவிட்டுள்ளனர்
தமிழகம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்துள்ள இவர்கள் இந்தியாவில் வசூல் செய்த பணத்தை வைத்து, சிங்கப்பூரில் நீதிமணி புல்லியன் தொழில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
இது மட்டுமின்றி, சினிமாவில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், தமிழ் சினிமாவில் உள்ள பிரபல தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் வட்டிக்கு கடனாகவும், திரைப்பட வெளியீட்டில் முதலீடும் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்து

இவர்கள் இருவரையும் நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் கூறப்பட்ட காலத்திற்குள் தங்களுக்கு பணம் திரும்பவராததால் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்ற காவல் துறையினர் நீதிமணி மற்றும் ஆனந்தை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த் இருவரையும்ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வைத்துவிசாரித்துள்ளனர்

நீதிமணி புல்லியனை விசாரித்த ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர், அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தில், அவர்களுடைய பெயரிலும், அவர்களதுகுடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் விவரம், அவர்கள் முதலீடு செய்துள்ள தொழில்கள் மற்றும் யார் யாருக்கு கடன் கொடுத்துள்ளார்கள்என்ற விவரத்தையும் கூறியுள்ளனர்.

நீதிமணியின் வாக்குமூலத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கள்கே.ஈ.ஞானவேல்ராஜா, ராக்போர்ட்’எண்டர் டெயின்மென்ட் முருகானந்தம்,மற்றும் சேலம் ‘7ஜி’ சிவா ஆகியோருக்கு பல கோடிகள் கடன் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்தை விசாரித்த ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அதில் நீதிமணி புல்லியனை முதல் குற்றவாளியாகவும்(A 1), ஆனந்தை இரண்டாவது குற்றவாளியாகவும்(A 2) சேர்த்துள்ளனர். நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது 406, 420, 294 B மற்றும் 506/2 ஆகிய குற்ற பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்மந்தமாக தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர்கள் ‘ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட்
முருகானந்தம் மற்றும் ‘7ஜி’ சிவா ஆகியோரை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்படி ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை வட்டாரம் சொல்கிறது. இந்த நிலையில் 7G சிவா, முருகானந்தம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சினிமா வியாபாரத்திற்கு எங்களை தொடர்புகொள்கிறவர்கள் யார், என்னதொழில் செய்கிறார்கள் அவர்களுக்கு பணம் எப்படி கிடைத்தது என்கிறஆய்வை நாங்கள் மேற்கொள்வது இல்லை

எங்களைப் பொருத்தவரை வியாபாரம் முடிந்தால் போதும் என்கிற மனநிலையில்தான் செயல்படுவோம் அந்த அடிப்படையில் நீதிமணி புல்லியன் எங்களை தொடர்பு கொண்டபோது படங்களை வாங்கி கொடுக்கும் வேலைகளை செய்து கொடுத்தோம் கடந்த பத்து மாதங்களாக எங்களது வியாபார தொடர்பில் நீதிமணி புல்லியன் தரப்பு இல்லை நாங்க அவர்களிடம் பைனான்ஸ் எதுவும் நாங்கள் வாங்கவில்லை

காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்ட போது இதே விளக்கத்தை கூறியுள்ளோம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளோம் சில ஊடகங்களில் எங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் தவறானது என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here