கொரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது இதன் காரணமாகசினிமா படப்பிடிப்புகள், திரையரங்கு தொழில்களும் முடங்கியுள்ளன இந்த நிலையில் கடந்த மாதம் தெலுங்கு, தமிழ் திரைப்பட துறையில் படப்பிடிப்பு, போஸ்ட் புரடெக்க்ஷன் வேலைகளை தொடங்க அனுமதி கேட்டனர்

இதற்காக தமிழகத்தில் R.K.செல்வமணி , குஷ்பூ, ராதிகா ஆகியோர் தமிழக செய்தி விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து மகஜர் கொடுத்தனர் அதன் பின் தொலைக்காட்சி தொடர்படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது டப்பிங் இசைகோர்ப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது மீண்டும் சென்னை நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது
தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவி தலைமையில் நடிகர்கள், இயக்குனர்கள் ஆந்திர, தெலுங்கானா மாநில முதல்வர்களை சந்தித்து படப்பிடிப்பு தொடங்க அரசு அனுமதி கேட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்கள் படப்பிடிப்புஅதிகமாக நடக்கும் இடம் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான்
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சென்னை அளவிற்கு கொரோனா தொற்று பரவவில்லை. எனவே அங்கு தெலுங்குத் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கியது.

தெலுங்குடிவி தொடர் படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் அதில் நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக டிவி தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

கொரோனா தொற்று அச்சத்தால் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. தெலுங்கு திரையுலகத்தின் தற்போதைய பிரம்மாண்ட பட்ஜெட் படமான ராஜமவுலி இயக்கும்ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், படத்தின் ஹீரோக்களான ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் கொரோனா தொற்று அச்சம் காரணமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால், ராஜமவுலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்.
RRR படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமுகமாக நடைபெற்றிருந்தால் அதனை தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த தெலுங்கு
படங்களின் படப்பிடிப்பை தொடர தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்
இனிபடப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என இப்போதைக்கு சொல்ல முடியாது என தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here