துக்ளக் தர்பார்சன் டிவி நிபந்தனை

0
127
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே ஒரு கொடுமை குத்தவச்சு உட்கார்ந்திருந்ததாம் – நெருக்கடியில், கஷ்டப்படுகிறவர்கள் மத்தியில் அடிக்கடி கூறப்படும் பழமொழி இது

தமிழ் சினிமாவில் எந்த நிர்வாக தயாரிப்பாளரும் இம்புட்டு பொறுமையாக இருந்து பொருளாதாரநெருக்கடி, விநியோகஸ்தர்களின் நம்பிக்கை துரோகம், நாணயம் இன்மை என அனைத்தையும் சமாளித்து”மாஸ்டர்” படத்தை திரையரங்குகளில் ரீலீஸ் செய்து வெற்றியை ருசித்த சூத்திரதாரி தயாரிப்பாளர் லலித்குமார் 10 க்கும் மேற்பட்ட படங்கள் இவரது தயாரிப்பில் உள்ளது சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படங்களில் முடங்கியுள்ளது இத்தனை சிறப்புகள் இருந்தும் சன் தொலைக்காட்சியிடமிருந்து தடையில்லா கடிதம் ஒன்றை வாங்க முடியாமல் தவித்து வருகிறார் லலித்குமார

விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதுக்ளக் தர்பார்படத்தைலலித்குமார் தயாரித்திருக்கிறார் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது படத்தை வியாபாரம் செய்யஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது அந்நிறுவனம் அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி வெளியிடத் ஒப்புக்கொண்டது படம் தொடங்கியபோது திரையரங்க வெளியீடு என்பதால்
படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சிக்கு வியாபாரம் பேசி ஒப்பந்தம் கையெழுத்தாகி முன் தொகையும் வாங்கப்பட்டிருந்ததுஎனவே, சன் தொலைக்காட்சி தடையில்லாச் சான்று கொடுத்தால்தான் ஹாட் ஸ்டாருடனானஒப்பந்தம்நடைமுறைக்கு வரும் இதனால், சன் தொலைக்காட்சியுடன் பலமுறை தயாரிப்பாளர் லலித்குமார் பேசியும்  தடையில்லாச் சான்று தரசன் தொலைக்காட்சி மறுத்து விட்டனர்

தயாரிப்பாளர் லலித்குமார் தொடர் முயற்சியால்சன் தொலைக்காட்சி
ஒரு நிபந்தனையுடன் தடையில்லாச் சான்று கொடுக்க முன்வந்திருக்கிறது ஒரு படத்தின் வியாபாரத்தை, வரவு செலவை அத்துடன் முடித்துவிட வேண்டும் ஆனால் தமிழ்சினிமாவில் இந்தநடைமுறையை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அதுவும் தொடர்ந்து படத்தயாரிப்பில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் கடைபிடிப்பதில்லை அதனையேதனக்குசாதகமாக்கி
தயாரிப்பாளர் லலித்குமார்  தயாரிக்கவுள்ளஇன்னொரு படம் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சிக்கு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறது

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா , சமந்தா உள்ளிட்டோர் நடிக்கும் அந்தப்படத்தின் உரிமையை வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவிவருகிறது அந்த போட்டியில் சிக்கி அதிக விலை கொடுத்து வாங்க விரும்பாத சன் தொலைக்காட்சி எந்த சிரமமும் இன்றி குறைவான விலையில் படத்தை வாங்க முயற்சிக்கிறது என்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்

திமுக தமிழகத்தின்ஆட்சிபொறுப்புக்கு வந்தால் சன்தொலைக்காட்சி,கலைஞர் தொலைக்காட்சிஇரண்டும்தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கும் என தேர்தல்பிரச்சாரத்தில்அதிமுகவில் உள்ள சினிமா பிரபலங்கள் கூறி வந்தனர். தயாரிப்பாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற சூழலில் தமிழ் சினிமாவை வைத்து பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் சன் தொலைக்காட்சி துக்ளக் தர்பார்படத்தைவிட்டுக் கொடுப்பதால், அல்லது தடையில்லா சான்று வழங்குவதன் சன் தொலைக்காட்சிக்கு  இழப்பு ஏற்படபோவதில்லை லாபத்தின் சதவீதம் மட்டுமே குறையும் ஆனால் அதனை செய்ய சன் தொலைக்காட்சிக்கு மனமில்லாதது கண்டு கோடம்பாக்க சினிமா வட்டாரம் அதிர்ந்து போயுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here