விஜய் படத்தில் மகேஷ்பாபு மகள்

0
67

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் 65வது படத்தின் பணிகளே இன்னும் முடியாத நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன.
விஜய்யின் 66வது படத்தை இயக்க பல இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவியது ஆனால் தெலுங்கு இயக்குனர் வம்சிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததுஇவர் தமிழில் கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘தோழா’, மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரும் கூட. தமன் இசையமைக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க  நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஆக்க்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், இந்த படத்தின் மூலம் குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, விஜய்க்குமகளாகநடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது தெலுங்கில் முன்னணி நடிகராகவும், பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதல் இடத்தில் இருக்கும் மகேஷ்பாபுவுக்குதமிழகத்தில் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போன்று ஆந்திராவில் உள்ளனர் அவரது மகள் விஜய் படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் அவரது ரசிகர்களையும் விஜய் பக்கம் கொண்டுவரும் வியூகமாக இந்த முயற்ச்சி பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here