புஷ்பா படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்

0
163

நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை தனது நடிப்பு எல்லையை தமிழ்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துவருகிறார். அதற்கேற்றபடி அவருக்கு வரவேற்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா’ என்கிற படத்தில் வனத்துறை அதிகாரியாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்

இந்தநிலையில் அந்தப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொண்டதாகவும் அவருக்கு பதிலாக பாபி சிம்ஹா அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநில போலீஸாரால் செம்மரம் கடத்தியதாக கிட்டத்தட்ட 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது அந்த சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்த புஷ்பா படம் உருவாகி வருகிறது. இதில் தமிழர்களை செம்மர கடத்தல்காரர்களாக சித்தரிப்பதை விஜய்சேதுபதி விரும்பவில்லையாம்.. மேலும் அவரது வனத்துறை அதிகாரி வேடமும் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வில்லத்தனமான கதாபாத்திரம் என்பதால் தமிழர்களுக்கு எதிரானவன் என தேவையில்லாமல் முத்திரை குத்திக்கொள்ள வேண்டாம் என்பதும் இந்தப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள காரணம் என்று சொல்லபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here