விக்னேஷ் சிவன் இயக்கும் விஜய்சேதுபதி நடிக்கும் படம்

0
177

2018 ஜனவரியில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நடித்த அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியிருந்தார்.

அதற்கடுத்து அவர் இயக்கும் படம் காத்து வாக்குல் ரெண்டு காதல். இப்படம் குறித்த அறிவிப்பு 2020 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கொரானா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளிப்போனது.இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

2015 அக்டோபரில் விக்னேஷ்சிவன் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இணைந்த கூட்டணியில் உருவான நானும் ரவுடிதான் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here