விஜய் சேதுபதியுடன் இணையும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்

0
85
கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோருடன் ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் தொடர்பான செய்தி அண்மையில் வெளியானது.அப்போதுதயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,படத்தில் பணிபுரியும் இயக்குநர்கள் அனைவருமே தமிழ்த் திரையுலகை தங்கள் படைப்புகள் மூலம் ஒரு படி முன்னெடுத்துச் சென்றவர்கள். தங்களுக்கான தனி முத்திரையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுடன் தனித்தனியாகப் படங்களில் பணிபுரிய வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறது.ஏற்கெனவே இக்குழுவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடிக்க “ஜோஷ்வா இமைபோல் காக்க” திரைப்படத்தைத் தயாரித்து வருகிறோம். இன்னும் ஆச்சர்யப்படுத்த்தும் படைப்புகள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என்று கூறியிருந்தார்.
அவர் சொன்ன ஆச்சரியப்படுத்தும் படைப்புகளில் ஒன்றாக அமையவிருப்பது,‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நலன்குமாரசாமி இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
அந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here