விஜய்மக்கள்இயக்கம்அரசியல்கட்சியாக மாற்றப்படும் – எஸ்.ஏ.சந்திரசேகர்

0
158
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வதந்திஅவ்வப்போது வருவதும் அடங்குவதுமாக இருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவை ஆதரித்தது.
அதன்பிறகு தமிழகத்தில் நடைபெற்றதேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. அவர் நடித்த படங்களின்இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியிருந்தனர். அண்மையில் குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்த சூழலில், விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகரும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அதனை அவர்திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு  அக்டோபர் 21 அன்று பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம், பாஜகவிலிருந்து அழைப்பு வந்தால் உங்களின் பதில் என்ன எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனக்கென்று விஜய் மக்கள் இயக்கம் என்னும்
ஒரு அமைப்பு இருக்கிறது. அதனை நான் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தி வருகிறேன். அதில்தான் எனது முழுக் கவனமும் இருக்கிறது. ஆகவே, மற்ற கேள்விகளை கேட்கலாம் என்று பதிலளித்தார்.
விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக எப்போது மாறும் என்ற கேள்வி எழுப்பப்பட, தேவைப்படும்போது, மக்கள் விருப்பப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும்போது நாங்கள் வருவோம். நாங்களாக வந்து மக்களை கூப்பிடுவதை விட, மக்கள் அழைக்கும்போது வந்தால் அதற்கான சக்தி இன்னும் அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் சந்திரசேகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here