வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு?

0
59
கிஷோர், சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.
இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.
அந்தப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க (கெளரவ தோற்றம் ) விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்போது அப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டிருக்கிறாராம்.
பத்திலிருந்து பனிரெண்டு நாட்கள் வரை அவர் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அவ்வளவு நாட்கள் நடிப்பதால் படத்தின் பெரும்பகுதியில் அவர் வருவது போல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.இதற்காக விஜய்சேதுபதிக்குக் கொடுக்கப்படும் சம்பளம் சுமார் மூன்று கோடி என்று சொல்லப்படுகிறது.பத்து நாட்களுக்கு மூன்று கோடி என்றால் ஒரு நாளுக்கு முப்பது இலட்சம்.
அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைக்காகவும் பட வியாபாரத்தின் நன்மைக்காகவும் இவ்வளவு சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைப்பதாகச் சொல்லப்படுகிறத

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here